Jun 11, 2025 - 11:30 AM -
0
நகர்ப்புற குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டத்தில் சாதனையொன்றை நிலைநாட்டும் வகையில், John Keells Properties ன் TRI-ZEN தனது 650 வது அடுக்குமனை குடியிருப்பை கையளிப்பதை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இது கொழும்பின் வளர்ந்து வரும் ஆதன நிர்மாணத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. 85% அடுக்குமனைகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், இந்த சாதனையானது செயற்திட்டத்தின் மீது சந்தை கொண்டுள்ள வலுவான நம்பிக்கையையும், நகரின் மையப்பகுதியில் திறன் முறை, சிறந்த அமைவிடம் மற்றும் சிக்கனமான விலையில் வாழ்விடங்களுக்கான வளர்ந்து வரும் தேவையையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.
கொழும்பு 02 இல் அமைந்துள்ள வலுவான வளாகத்தில் அமைந்துள்ள TRI-ZEN, கொழும்புப் பகுதியில் உள்ள மிகப்பெரிய தனித்த குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டமாகும். மூன்று வானளாவிய கோபுரங்களில், திறன்மிக்க வகையில் வடிவமைக்கப்பட்ட 897 அடுக்குமனை குடியிருப்புகளை அது கொண்டுள்ளது. இலங்கையில் ஒரு தனியார் நிர்மாணிப்பாளரால் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டுள்ள மிகவும் பாரிய, வானளாவிய குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டமான TRI-ZEN, நகர வாழ்க்கைக்கு மறுவடிவம் கொடுத்துள்ளதுடன், அபிலாஷை நிறைந்த மற்றும் அனைத்து வசதிகளையும் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கை முறையை வழங்குகிறது.
John Keells Properties ன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி நதீம் ஷம்ஸ் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “எமது 650 வது அடுக்குமனையைக் கையளித்து வைத்துள்ளமை எங்கள் அனைவருக்கும் பெருமையானதொரு தருணம். அமைவிடம், பரந்த அளவிலான வசதிகள், திறன் தொழில்நுட்பம் மற்றும் சிக்கனமான விலை ஆகியவற்றுடன் TRI-ZEN கொண்டு வரும் ஒப்பற்ற மதிப்பை அங்கீகரிக்கும் வகையில் கொள்வனவாளர்களிடமிருந்து எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள மிகுந்த ஆர்வம் மற்றும் நேர்மறையான கருத்துக்கள் அதன் தனித்துவத்தைக் காண்பிக்கின்றன. சொற்ப எண்ணிக்கையிலான அடுக்குமனைகள் மட்டுமே மீதமுள்ள நிலையில், கொழும்பின் மிகவும் மையப் பகுதியில், இந்த விலையில் ஒரு திறன் இல்லத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கான அரிய வாய்ப்புகளில் இதுவும் ஒன்றாகும்,” என்று குறிப்பிட்டார்.
யூனியன் பிளேஸில் மையப்பகுதியில் இது அமைந்திருப்பதால், முன்னணி பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஹோட்டல்கள், அலுவலகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றுக்கு நடைதூரத்தில் குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர். இது தொழில் வல்லுநர்கள், குடும்பங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என அனைவருக்கும் ஒப்பற்ற அனுகூலத்தை வழங்குகின்றது. இது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மற்றும் நடைமுறைக்கு அமைவான விலை ஆகியவற்றின் அரிதான கலவையாகக் காணப்படுவதுடன், இன்று கொழும்பில் மிகவும் கவர்ச்சிகரமான குடியிருப்புகளில் ஒன்றாகவும் திகழ்கின்றது. TRI-ZEN அனைத்து வயதினருக்கும் ஒரு சிறப்பான வாழ்க்கை முறையை வழங்குகிறது. இதில் நீச்சல் தடாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா தளம், நடைப்பயிற்சித் தடம், விளையாட்டுக்கள் அறை, சிறுவர்கள் விளையாடும் பகுதி, தனிப்பட்ட சினிமா மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டு இடங்கள் மற்றும் பல வசதிகள் அடங்கியுள்ளன.
நகரின் மையப்பகுதியில், பாதுகாப்பான மற்றும் துடிப்பான சூழலில் சுறுசுறுப்பான, அனைத்து வசதிகளுடனும் இணைக்கப்பட்ட வாழ்க்கைக்கு இந்த நிர்மாணச் செயற்திட்டம் வழிகோலுகிறது.
அதன் அமைவிடம் மற்றும் திறன் அம்சங்களுக்கு மேலதிகமாக, குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்வை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை முறை வசதிகளை TRI-ZEN வழங்குகிறது. வீட்டிற்குள்ளேயே சலவை சேவை, வீட்டு பராமரிப்பு சேவைகள் ஆகியவற்றுடன், அங்கேயுள்ள கஃபே, அண்டை வீட்டாரைச் சந்தித்து அளவளாவ அல்லது ஓய்வெடுக்க ஒரு வரவேற்கத்தக்க இடத்தை வழங்குகின்றது.
பரபரப்பான நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு துணைபோகும் வகையில் இந்த சேவைகள் மிகவும் சிந்தித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வேலை, ஓய்வு அல்லது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது போன்றவை மூலமாக இது குடியிருப்பாளர்கள் உண்மையிலேயே முக்கியமானவற்றிற்கு அதிக நேரத்தை செலவிட்டு அவற்றை அனுபவிக்க இடமளிக்கிறது.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் துறைத் தலைவரும்/ஆதனத் துறையின் நிறைவேற்று துணைத் தலைவருமான இனோக் பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “650 அடுக்குமனைகளை கையளித்து வைத்துள்ள இச்சாதனை எமது அணிக்கும் இலங்கையின் நகர்ப்புற நிர்மாண அபிவிருத்திக்கும் பெருமையைச் சேர்ப்பிக்கும் ஒரு தருணம். மத்திய அமைவிடத்தில் திறன், வானளாவிய அடுக்குமனை வாழ்வியல் என்பதை எட்ட முடியாத விலையில் அடைய வேண்டியதில்லை என்பதை TRI-ZEN நிரூபிக்கிறது. இது இன்றைய நகரவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வடிவத்தில் தலைசிறந்த மதிப்பை வழங்குவதுடன் தொடர்புபட்டதாகும். நகரத்தில் வாடகை பாரியளவில் அதிகரித்து வருவதை எம்மால் காணக்கூடியதாக உள்ளதுடன், இது TRI-ZEN அடுக்குமனை குடியிருப்பை வாங்கும் எவருக்கும் வாடகை வருமானத்தை அதிகரிக்கச் செய்யும்,” என்று குறிப்பிட்டார்.
தற்போது சொற்ப எண்ணிக்கையிலான அடுக்குமனைகள் மட்டுமே எஞ்சியுள்ளதால், மிகவும் சிக்கனமான விலையில் செழிப்பான குடியிருப்பு சமூகத்தின் அங்கமாக மாறும் ஒரு தனித்துவமான வாய்ப்பை கொள்வனவாளர்கள் கொண்டுள்ளனர். இங்கு திறன் வாழ்க்கையும், ஒப்பற்ற சௌகரியமும் சங்கமிக்கின்றன.
மேலதிக தகவல் விபரங்களுக்கு அல்லது அடுக்குமனைகளை நேரடியாக சென்று பார்வையிடுவதற்கான நியமனத்திற்கு, +94 702 294294 என்ற இலக்கத்தின் மூலமாக TRI-ZEN துரித சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது www.trizen.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.

