Header Logo
Mogo Academy

பல்சுவை
பாடசாலை பகையை மனதில் வைத்து தாக்குதல்

Jun 11, 2025 - 11:36 AM -

0

பாடசாலை பகையை மனதில் வைத்து தாக்குதல்
Mobitel inner

இந்தியாவின் கேரளாவின் காசர்கோட்டில் 52 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பாடசாலை சண்டையின் பகையை மனதில் வைத்து, இரண்டு முதியவர்கள் தங்கள் முன்னாள் வகுப்புத் தோழரைத் தாக்கியுள்ளனர்.

 

பாலால் கிராம பஞ்சாயத்தில் உள்ள நடக்கல் எய்டட் யுபி பாடசாலையில் 52 வருடங்கள் முன்பு தங்களுடன் நான்காம் வகுப்பு படித்த வி.ஜே. பாபு (62) என்பவரைத் தாக்கியதாக மாலோத்து பாலகிருஷ்ணன் மற்றும் மேத்யூ வலியபிளாக்கல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஜூன் 2 ஆம் திகதி மாலோம் நகரில் உள்ள ஜனரங்கன் ஹோட்டல் முன் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

 

பொலிஸ் தகவலின்படி, பாலகிருஷ்ணன் பாபுவைத் தரையில் சாய்த்துக்கொண்டபோது, மேத்யூ கல்லைப் பயன்படுத்தி அவரது முகத்திலும் உடலிலும் தாக்கியுள்ளார். நான்காம் வகுப்பில் பாலகிருஷ்ணனை ஏன் தாக்கினாய் என்று இரு நபர்களும் பாபுவிடம் கேட்டுள்ளனர்.

 

இந்தத் தாக்குதலில் பாபுவுக்கு இரண்டு பற்கள் உடைந்ததாகவும், கன்னூரில் உள்ள பிரியாரம் அரசு மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளரிகுண்டு ஆய்வாளர் டி.கே. முகுந்தன் தெரிவித்தார்.

 

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நீண்டகாலப் பகையும், மதுபோதையில் இருந்ததும் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று பாபு தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara