வணிகம்
இலங்கையின் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தகநாமமாக சியெட் தெரிவு

Jun 11, 2025 - 01:32 PM -

0

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தகநாமமாக சியெட் தெரிவு

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் முன்னணி வர்த்தக சஞ்சிகையான LMDயினால் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் டயர் வர்த்தக நாமமாக சியெட்டை தெரிவு செய்துள்ளது. 

LMD ஆல் நியமிக்கப்பட்ட PepperCube Consultants நடத்திய ஒரு கணக்கெடுப்பின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கௌரவமிக்க விருதானது சியெட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேல், தென், மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களைச் சேர்ந்த LMD வாசகர்கள் இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றதுடன், மேலும் அவர்களின் பதில்கள் 43 பிரிவுகளின் கீழ் நாட்டின் மிகவும் விரும்பப்படும் வர்த்தக நாமங்களின் தரவரிசையைத் தொகுக்க வழிவகுத்தன. 

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த சியெட் களனி ஹோல்டிங்ஸ் (CEAT Kelani Holdings) நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. ஷமல் குணவர்தன, உள்நாட்டு சந்தைக்காக குறிப்பாக டயர்களை உருவாக்கி தயாரிப்பதில் பொதுமக்களின் பார்வைக்கு புலப்படாத வகையில் எமது ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து கடின உழைப்பிற்கும் இது ஒரு சிறந்த அங்கீகாரமாகும். இந்த பாராட்டு மிகவும் முக்கியமானது, ஏனெனில் கணக்கெடுப்புக்காக அணுகப்பட்டட் அனைவரும் டயர் பயனர்களாக இருந்திருக்க மாட்டார்கள். எனவே எமது வர்த்தகநாமத்தை கட்டமைக்கும் முயற்சிகள் பரந்த பார்வையாளர்களை சென்றடைகின்றன என்பதை இது குறிப்பதுடன், இந்த விருதானது மிகவும் பொருத்தமானதாக திகழ்கிறது. ஏனெனில் பயணிகளின் வாழ்க்கையும் டயர்களில்தான் தங்கி உள்ளது. 

இதேவேளை 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்படும் டயர் உற்பத்தி நிறுவனமாக், தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனத்தால் (CPM) தேர்ந்தெடுக்கப்பட்ட சியெட் களனி ஹோல்டிங்ஸ், இலங்கையின் அதிக விருதுகளைப் பெற்ற டயர் உற்பத்தியாளராக தனது நாமத்தை பதிவு செய்துள்ளது. இதற்கிணங்க சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் உட்பட ஏராளமான விருதுகள் மற்றும் சர்வதேச தர வட்டங்கள் மாநாட்டிலிருந்து பல்வேறு தர விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சட்ட மற்றும் செயல்பாட்டு இணக்கம் மற்றும் வலுவான விநியோகச் சங்கிலிக்கான பாதுகாப்பை அங்கீகரிக்கும் விதமாக, இலங்கை சுங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார செயற்பாட்டாளர் (AEO) அடுக்கு I அந்தஸ்தை சியெட் களனி பெற்றுள்ளது. இலங்கையின் நியூமேடிக் டயர் தேவைகளில் பாதியை சியெட் களனி உற்பத்தி செய்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட டயர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் தேசிய பொருளாதாரம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவுவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. மேலும், அதன் உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தை 16 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

சியெட் களனி நிறுவனம் தற்போது வருடாந்தம் 150,000 க்கும் மேற்பட்ட அசல் உபகரண (OE) டயர்களை உள் நாட்டு வாகன உதிரிப்பாகங்கள் பொருத்தல் துறைக்கு வழங்கி வருகிறது. இது இலங்கையில் பொருத்தப்படும் வாகனங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை உள்ளடக்கியது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் சியெட் டயர்கள் தற்போது 30 க்கும் மேற்பட்ட வாகன மாதிரிகளான SUVகள், கார்கள், பேருந்துகள், லாரிகள், பிக்-அப் டிரக்குகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றில் அசல் உபகரணங்களாக உள்ளன. இலங்கையில் பொருத்தப்படும் 11 வர்த்தக நாம வாகனங்களில் இவை உள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05