சினிமா
நடிகர் தனுஷ் உடைத்த ரகசியம்

Jun 11, 2025 - 02:26 PM -

0

நடிகர் தனுஷ் உடைத்த ரகசியம்

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் குபேரா. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

 

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நாகர்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

இப்படம் வரும் ஜூன் 20 ஆம் திகதி திரையரங்கில் வெளிவர உள்ள நிலையில், இயக்குநர் சேகர் கம்முலா குறித்து தனுஷ் பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

அதில், 'சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவங்கள் கொடுத்தது. அதேசமயம் கொஞ்சம் மோசமான அனுபவத்தையும் கொடுத்தது.

 

எனக்கும் ராஷ்மிகாவுக்கும் குப்பைத் தொட்டியில் கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு மணிநேரம் ஷூட் இருந்தது.

 

அப்போது நான் ராஷ்மிகாவிடம் என்ன இப்படி நாற்றம் அடிக்கிறது என்றேன். அதற்கு ராஷ்மிகா, சார் எனக்கு எதுவுமே நாற்றம் அடிக்கவில்லையே என்றார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது' என்று தெரிவித்துள்ளார்.        

Comments
0

MOST READ
01
02
03
04
05