Jun 11, 2025 - 03:31 PM -
0
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இதனை தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். 'நாயகன்' (1987) படத்தை தொடர்ந்து, அதாவது 38 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 'தக் லைஃப்' படம் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.டி.டி. உரிமம் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.