Jun 12, 2025 - 10:13 AM -
0
சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதித் தீர்வான செலான் வங்கியின் செலான் ஹரசர, ஆசிரி மருத்துவமனைகள், Vision Care மற்றும் விஜித யாபா புத்தகக் கடைகளுடன் அதன் வரவட்டை பங்காளித்துவம் ஊடாக மருத்துவத் தேவைகள் மற்றும் பொழுது போக்கு செயற்பாடுகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. சிரேஷ்ட பிரஜைகளுக்கு கிடைக்கும் பரந்த நிதிச் சேவைகளில் ஒன்றான செலான் ஹரசர, சிரேஷ்ட பிரஜைகளின் அத்தியாவசியத் தேவைகளை அடையாளம் கண்டு பொருத்தமான நிதித் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹரசர வரவட்டைகளை வைத்திருக்கும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு சிறப்பு நிதி தீர்வு மூலம் அவர்களுக்கு உதவும் வகையில், அட்டை வாடிக்கையாளர்கள் ஆசிரி மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகளிற்கு 20% வரை தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். செலான் ஹரசர உடனான இணைவு ஊடாக Vision Care, மூக்குக் கண்ணாடிகள், சன்கிளாஸ்கள் மற்றும் செவிப் புலன் கருவிகளுக்கு 10% வரை தள்ளுபடி வழங்குகிறது. மேலும், இலவச கண் பரிசோதனை சோதனைகள், நிறப் பார்வை சோதனை மற்றும் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் ஆகியவையும் இந்த சலுகையில் அடங்கும். ஹரசர, வாடிக்கையாளர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பது போலவே அவர்களின் உள ஆரோக்கியத்திலும் வங்கியின் நீண்டகால ஆர்வத்தை பிரதிபலிக்கும் வகையில் விஜித யாபா புத்தகக் கடைகளுடன் இணைந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு புத்தகங்களுக்கு 15% வரை சலுகையை வழங்குகிறது.
மேலும், அன்புடன் அரவணைக்கும் வங்கி, 60வது பிறந்தநாள், பணியிலிருந்து ஓய்வு பெறுதல், திருமண ஆண்டு விழா கொண்டாட்டங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளிற்கு ஹரசர கணக்கு வைத்திருப்பவர்களுக்கு திட்டவட்டமான பண வெகுமதிகளுடன் மெகா வெகுமதிகளையும் வழங்குகிறது. மேலும், கண்புரை அறுவை சிகிச்சைகளுக்கான அறுவை சிகிச்சை செலவுகள் மற்றும் கண்ணாடி வில்லைகளை வாங்குவதற்கான செலவுகளில் ரூ. 200,000 வரையான பணத்தை வாடிக்கையாளர்கள் திருப்பிப் பெறலாம். தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் ஹரசர வாடிக்கையாளர்கள் செலான் ஹரசரவின் வருடாந்த மருத்துவ வெகுமதியையும் பெறுவர். மேலும், அன்புடன் அரவணைக்கும் வங்கியின் அர்ப்பணிப்புள்ள சுஹத சேவா சேவை ஊடாக அதன் கிளை வலையமைப்பின் மூலம் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர்கள் ரூ.5 மில்லியன் வரையான ஓய்வூதியக் கடனை எதிர்பார்க்கலாம்.
அதன் நன்மைகள் குறித்து கருத்து தெரிவித்த சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவி பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, “செலான் ஹரசர எங்கள் பல முக்கிய கொள்கைகளைப் பிரதிபலிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதியை எளிதாக்குவதற்கான முழுமையான அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மிக முக்கியமாக, எல்லாவற்றிற்கும் மேலாக வாடிக்கையாளர் தேவைகளில் நாங்கள் எவ்வாறு கவனம் செலுத்துகிறோம் என்பதை இது நிரூபிக்கிறது. செலான் ஹரசர, நமது சிரேஷ்ட பிரஜைகளையும் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமன்றி தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விலும் முதலீடு செய்த பல ஆண்டுகால முயற்சிகளையும் கொண்டாடுகிறது. எனத் தெரிவித்தார்.

