வணிகம்
NDB வங்கி டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்க Mastercardஉடன் இணைந்து டெபிட் அட்டையை அறிமுகப்படுத்துகிறது

Jun 12, 2025 - 12:37 PM -

0

NDB வங்கி டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்க Mastercardஉடன் இணைந்து டெபிட் அட்டையை அறிமுகப்படுத்துகிறது

NDB வங்கியானது வங்கியின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் டிஜிட்டல் கட்டண முறையை ஏற்றுக்கொள்வதற்கும் நிதியியல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கும், அதேவேளை அதன் வாடிக்கையாளர்களுக்கு பாரிய பெறுமதியை வழங்கும் வகையிலும் NDB Mastercard டெபிட் அட்டையினை அறிமுகப்படுத்துவதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது, NDB வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்வானது , NDB வங்கிக்கும் உலகளாவிய கட்டண தொழில்நுட்பத் தலைவரான Mastercard க்கும் இடையிலான சக்திவாய்ந்த ஒத்துழைப்பின் ஆரம்பத்தினை குறிப்பதாக அமைந்தது. 

இந்த புதிய அட்டையானது , வங்கியின் வாடிக்கையாளர்களுக்கான அன்றாட வங்கிச் சேவையை மேம்படுத்தவும், NDB இன் நம்பகத்தன்மையை உலகளாவிய வலையமைப்பு மற்றும் Mastercard இன் புதுமையுடன் ஒன்றிணைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்அட்டைதாரர்கள் மேம்படுத்தப்பட்ட பரிவர்த்தனை பாதுகாப்புடன், தற்போது உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பரந்த அளவிலான பிரத்தியேக நன்மைகளை அனுபவிக்க முடியும். புதிய டெபிட் அட்டையின் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில் அதன் புதுமையான மற்றும் உள்ளடக்கிய நவீன வடிவமைப்பு ஆகும், இது விசேடமாக பார்வை குறைபாடுள்ள வாடிக்கையாளர்களுக்கு அணுகலை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் சேவை செய்யும் வகையிலான தயாரிப்புகளை உருவாக்குவதற்கான NDB இன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. 

இந்த நிகழ்வில் NDB வங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரியும் பணிப்பாளருமான திரு. கெலும் எதிரிசிங்க; NDB இன் துணை பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. கே. வினோஜ்; NDB இன் சிரேஷ்ட துணைத் தலைவர் திரு. சஞ்சய பெரேரா; NDB இன் துணைத் தலைவர் திரு. ஜெயன் ஹமீத்; NDB இன் உதவி துணைத் தலைவர்/கார்டுகளின் தலைவர் திரு. ஆஷான் விக்ரமநாயக்க; Mastercard இன் தெற்காசிய பிரிவுத் தலைவர் திரு. கௌதம் அகர்வால்; Mastercard இன் தெற்காசியாவின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. விகாஸ்வர்மா; மற்றும் Mastercard இன் இலங்கை மற்றும் மா லைத்தீவுக்கான வதிவிட முகாமையாளர் திரு. சந்துன் ஹப்புகொட உள்ளிட்ட இரு நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

Mastercard சார்பாக உரையாற்றிய சந்துன்ஹப்புகொட , வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட கட்டணத் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கு NDB வங்கியுடன் இணைந்து பணியாற்றுவதில் Mastercard மகிழ்ச்சியடைகிறது. இலங்கையில் டிஜிட்டல் கட்டண ஏற்பு மற்றும் நிதியியல் உள்ளடக்கத்தை வளர்ப்பதில் இரு நிறுவனங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த பங்குடைமையானது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த அறிமுகமானது எதிர்காலத்தில் இதுபோன்ற பல புத்தாக்கமான தீர்வுகளுக்கு அடித்தளமிட்டுள்ளது என்றார். 

NDB Mastercard டெபிட் அட்டையானது தற்போது அனைத்து தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது, மேலும் வங்கி அட்டைதாரர்களை பாதுகாப்பான, புத்திசாலித்தனமான மற்றும் அதிக பலனளிக்கும் டிஜிட்டல் கட்டண தீர்வின் நன்மைகளைபெற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது. NDB வங்கியானது இது போன்ற ஒத்துழைப்புகள் மூலம்,தனது வாடிக்கையாளர்களுக்கான வங்கி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், புத்தாக்கமான நிதியியல் தீர்வுகள் மூலம் இலங்கையர்களை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05