Header Logo

வணிகம்
ஸ்கண்டினேவிய கல்விப் பாதைகள் மூலம் உலக எதிர்காலத்தை வடிவமைத்த 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Eduzone கல்வி ஆலோசனை நிறுவனம்

Jun 12, 2025 - 12:42 PM -

0

ஸ்கண்டினேவிய கல்விப் பாதைகள் மூலம் உலக எதிர்காலத்தை வடிவமைத்த 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Eduzone கல்வி ஆலோசனை நிறுவனம்

Eduzone Consultants (Pvt) Ltd நிறுவனம், தனது 15ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது. 2010 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இலங்கையில் முதன்முதலாக ஊக்குவித்த கல்வி ஆலோசனை நிறுவனமாக தனது பயணத்தை ஆரம்பித்தது. கடந்த 15 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கான விண்ணப்பங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, அவர்கள் பலரும் தற்போது சுவீடன் மற்றும் பின்லாந்தின் குடியுரிமையாளர்களாக மாற உதவியுள்ளது. அத்துடன், Eduzone நிறுவனம் ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான புலமைப்பரிசில்களையும் கல்விக் கட்டணங்களின் முழுமையான தள்ளுபடிகளையும் மாணவர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. 

ஆரம்பத்தில் போதியளவான விழிப்புணர்வு மற்றும் ஆர்வமின்றி இருந்த சூழலில், சுவீடன் மற்றும் பின்லாந்தை கல்விக்கான இலக்காக Eduzone அறிமுகப்படுத்தியபோது, இது ஒரு புது முயற்சி எனக் கருதப்பட்டது. இன்று, அந்த முயற்சி ஸ்கண்டினேவியாவில் வளர்ச்சியடைந்து உறுதியான இலங்கை மாணவர் சமூகம் ஒன்றை உருவாக்கியுள்ளது. Eduzone வழங்கிய தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மூலம், 15 வருடங்களைத் தாண்டிய இந்த பயணத்தில், இன்று இலங்கை இந்த இரு நாடுகளுக்கும் உயர் கல்விக்காக மாணவர்களை அதிக அளவில் அனுப்பும் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த சாதனையானது, உலகத் தரத்திலான கல்வி மற்றும் தொழில்முறை பாதைகளை வழங்க Eduzone மேற்கொண்டுள்ள ஊக்கமிக்க அர்ப்பணிப்பின் காரணமாக உருவாகியதாகும். முக்கிய எடுத்துக்காட்டாக, 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்று பெருமைக்குரிய Swedish Institute புலமைப்பரிசில்களில் இரண்டை Eduzone இன் வழிகாட்டலின் கீழ் பயணித்த மாணவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இன்று, Eduzone இன் தாக்கம் பல்கலைக்கழக வளாகங்களைத் தாண்டி வளர்ச்சி பெற்றுள்ளது. இலங்கை கலைஞர்கள் மற்றும் கலாசாரத் துறையைச் சேர்ந்தவர்கள் பின்லாந்தில் அதிகம் வசிப்பதானது, கடந்த ஒரு தசாப்தத்துடன் ஒப்பிடும்போது, கலாசார ஈடுபாட்டில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தை காட்டுகிறது. இது Eduzone இன் ஊக்குவிப்பால் ஸ்கண்டினேவியா முழுவதும் உருவான பல்வகைத் தன்மை கொண்ட இலங்கை சமூகத்துக்கு சான்றாகும். 

Eduzone நிறுவனத்தின் நிறுவுனரும் அதன் பணிப்பாளருமான சமல்க அல்விஸ் சமரசிங்க இது குறித்து தெரிவிக்கையில், “எப்போதும் மாணவர்களுக்கு சிறந்த, எதிர்காலத்திற்கு ஏற்ற ஆராய்ந்தறிந்து தெரிவு செய்யப்பட்ட கல்வி வாய்ப்புகளை வழங்குவதே எமது நோக்கமாக இருக்கிறது. கடந்த 15 வருடங்களாக மாணவர்களும் பெற்றோர்களும் எம் மீது வைத்த நம்பிக்கை தொடர்பில் நாம் மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம். இந்த சாதனையை கொண்டாடும் இத்தருணத்தில், மாணவர்கள் தாங்கள் பெறும் முதலாவது பட்டத்தை இலங்கையில் முடித்த பின்னரான உறுதியான அடித்தளத்துடன் சுவீடன் மற்றும் பின்லாந்தில் முதுநிலை கல்வியை தொடரும் வகையில் நாம் அவர்களை ஊக்குவிக்கின்றோம்.” என்றார். 

எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, Eduzone அதன் கல்வி புலமைப்பரிசில் வாய்ப்புகளை விரிவாக்கும் பணியில் உறுதியாக செயற்பட்டு வரும் அதேசமயம், நீடித்த மதிப்பும் பாதுகாப்பும் கொண்ட உயர்கல்வியை வழங்கும் நாடுகளை விரிவுபடுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. உலகின் முன்னேறிய நாடுகளில், வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பதோடு, வலுவான கல்வி மற்றும் தொழில்முறை தொடர்புகளை வளர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவதே Eduzone இன் இலட்சியமாகும். இந்த கல்வி ஆலோசனை நிறுவனம் இந்த ஆரம்ப நோக்கத்தை உறுதியுடன் பேணி வருகிறது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

title