Jun 12, 2025 - 01:40 PM -
0
நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சாமி, திருப்பாச்சி, கோ உள்ளிட்ட பல படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்து இருந்தவர் அவர்.
தெலுங்கில் 80களில் இருந்து நடித்து வரும் அவருக்கு 2015 இல் பத்மஸ்ரீ விருதும் அரசு வழங்கி கௌரவித்து இருந்தது.
மோசமான உடல்நிலை
நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
உடல்நிலை மோசமாகி, மெலிந்து, ஒரு காலில் கட்டு, மற்றொரு காலில் நீக்கப்பட்ட விரல்கள் என தற்போதைய நிலையை பார்த்து ரசிகர்கள் சோகமாகி இருக்கின்றனர்.
அவரை இந்த நிலையில் பார்ப்பது வேதனையாக இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.