Jun 12, 2025 - 02:13 PM -
0
`தான் கர்ப்பமாக இருப்பதாக பரவிய புகைப்படத்திற்கு கெனிஷா விளக்கமளித்துள்ளார்.
பிரபல சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷா என்பவருடன் கலந்துக்கொண்டார்.
அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையில், ரவி மோகன் - ஆர்த்தி தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த தம்பதியின் பிரிவிற்கு காரணம் கெனிஷாதான் என தகவல் பரவின. ஆனால், இதனை கெனிஷாவும், ரவி மோகனும் மறுத்திருந்தார்கள். இந்நிலையில், கெனிஷா பகிர்ந்த புகைப்படம் ஒன்றில் அவர் கருவுற்றிருப்பது போலத் தெரிவதாக பலர் கமெண்டுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள கெனிஷா, "எனக்கு சிக்ஸ்பேக்ஸ் இல்லை, நான் கர்ப்பமாகவும் இல்லை. தனது கைகளை மடக்கி வைத்திருந்ததால் அந்தப் புகைப்படத்தில் அப்படித் தெரிந்தது. யார் என்ன பேசினாலும், அது அவர்களுக்கே திரும்ப வரும். கர்மா சும்மா விடாது. எது உண்மை, எது பொய் என்று எல்லோருக்கும் ஒரு நாள் தெரிய வரும்" எனத் தெரிவித்துள்ளார்.