Jun 12, 2025 - 05:24 PM -
0
வட்டவளை, ஆகரவத்தை பிரதான வீதி தாழிறங்கியதால் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதுடன் ஹட்டன், டன்பார் தோட்டத்தில் குடியிருப்பு மற்றும் களஞ்சியசாலையும் மண்சரிவினால் சேதமாகியுள்ளது.
மலையகத்தில் தொடரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை, ஆகரவத்தை பிரதான வீதியின் ஒருப்பகுதி உடைந்து வீழ்ந்துள்ளமையினால் கனரக வாகனம் பயணிக்க முடியாத நிலையில் குறித்த வீதியின் பொதுப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மேலும் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மாத்திரம் பயணிக்க முடியும் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
--

