செய்திகள்
வவுனியா சிறைச்சாலைக்குள் விசாரணைகளை ஆரம்பித்த CID

Jun 12, 2025 - 06:06 PM -

0

வவுனியா சிறைச்சாலைக்குள் விசாரணைகளை ஆரம்பித்த CID

வவுனியா சிறைச்சாலைக்கு வருகை தந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று (12) விசாரணைகளை ஆரம்பித்துள்ளர்.

 

குறிப்பாக இன்று காலை சிறைச்சாலைக்குள் நுழைந்த சிஐடி குழுவினர் வவுனியா சிறைச்சாலையை சோதனை செய்துள்ளதுடன், அங்கு தங்கியிருந்து கடமையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

அதேநேரம் வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலையில் பணியாற்றும் 10 இற்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்காக அனுராதபுரம் அழைத்துச் சென்றுள்ளனர்.

 

முன்னதாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில்  சட்டவிரோதமாக விடுவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05