செய்திகள்
மொஹான் கருணாரத்ன மீண்டும் விளக்கமறியலில்

Jun 13, 2025 - 12:57 PM -

0

மொஹான் கருணாரத்ன மீண்டும் விளக்கமறியலில்

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இன்று (13) அவர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்ற கைதி ஒருவரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்த குற்றச்சாட்டின் பேரில், மொஹான் கருணாரத்ன கடந்த 8 ஆம் திகதி பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05