செய்திகள்
இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவர் நியமனம்

Jun 13, 2025 - 02:20 PM -

0

இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவர் நியமனம்

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறைகளில் விரிவான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அமல் நிரோஷன அத்தநாயக்கவை இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக நியமிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவால், இன்று (13) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில், அமல் நிரோஷன அத்தநாயக்கவிடம் இது தொடர்பான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. 

உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட அமல் நிரோஷன அத்தநாயக்க, கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவராவார். 

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கலை இளங்கலை (ஹானர்ஸ்) பட்டதாரியான இவர், பல்கலைக்கழக விளையாட்டு சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். டென்னிஸில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதோடு சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 

பல உள்ளூர் மற்றும் சர்வதேச நாமங்களின் வடிவமைப்பாளரான அத்தநாயக்க, தெற்காசியாவிலும் இலங்கையிலும் பல சர்வதேச கண்காட்சிகளை இயக்கி நிர்வகித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05