Jun 13, 2025 - 02:59 PM -
0
நல்லூர் பிரதேச சபையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி இணைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளரை தேர்வு செய்வதற்கான சபை அமர்வு இன்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த பத்மநான் மயூரன் தவிசாளராகவும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த இராஜமனோகரன் ஜெயகரன் பிரதித் தவிசாளராகவும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சபையில் தவிசாளர் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டதை அடுத்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சபை அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் அதிக பட்சமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் 7 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் 6 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சர்பில் தலா மூன்று உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஒரு உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டனர்.
--

