Jun 13, 2025 - 04:57 PM -
0
கணக்கியல், நிதி மற்றும் முகாமைத்துவ கல்வித் துறைகளில் முன்னணியில் திகழும் Alpha Business School அதன் மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்குவதற்காக கொமர்ஷல் வங்கியுடன் பங்குடமையில் இணைந்துள்ள இலங்கையின் சமீபத்திய உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது.
இரு நிறுவனங்களும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், கொமர்ஷல் வங்கியானது ACCA, CFA, AFM மற்றும் CIA போன்ற தொழில்சார் தகுதிகளை விரும்பும் Alpha Business School மாணவர்களுக்கு கவர்ச்சிகரமான விதிமுறைகளில் கடன்களை வழங்க வழி வகுக்கும்.
இதற்கிணங்க கொமர்ஷல் வங்கியானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியைத் தொடர விரும்பும் தொழில் புரியும் மற்றும் தொழிலற்ற மாணவர்களுக்கு, நெகிழ்வான விதிமுறைகளுடன் கல்விக் கடன் வசதிகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ. 10 மில்லியன் என்ற ரீதியில் பாடநெறி கட்டணத்தில் 75% வரையில் இரண்டு ஆண்டுகள் சலுகைக் காலத்துடன் ஏழு ஆண்டுகள் கால அவகாசத்துடன் இக்கல்விக்கடனை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
Alpha Business School என்பது இலங்கையை தளமாகக் கொண்ட தொழில்சார் ACCA மற்றும் CFA நிறுவனமாக திகழ்வதுடன் மேலும் இலங்கை மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு நேரடியாகவும் மற்றும் நிகழ்நேர அடிப்படையிலும் வகுப்புகளை நடத்துகிறது.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.

