வடக்கு
யாழ் மாநகர சபை மேயர் வேட்பாளர் தெரிவு

Jun 13, 2025 - 08:35 PM -

0

யாழ் மாநகர சபை மேயர் வேட்பாளர் தெரிவு


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ்.மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

 

யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று (13) யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

 

இதில், முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 

இலங்கை தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக விவேகனந்தராசா மதிவதனியும் அகில இலங்கை தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

 

வெளிப்படையான வாக்கெடுப்பில் விவேகானந்தராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும் கனகையா ஶ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும் கிடைத்தது. தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

 

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட விவேகானந்தராஜா மதிவதனி வெற்றி பெற்றதுடன், பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தெரிவானார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05