செய்திகள்
மதுவால் பிரிந்த உயிர் - ஹொரணையில் பயங்கரம்

Jun 14, 2025 - 08:59 AM -

0

மதுவால் பிரிந்த உயிர் - ஹொரணையில் பயங்கரம்

நேற்று (13) இரவு ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

கொலை செய்யப்பட்டவர்  63 வயதுடைய தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவர் தனது வீட்டில் நபரொருவருடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததால், சந்தேகநபர் அவரது தலையில் தடி ஒன்றால் தாக்கியதில் இந்தக் கொலை இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர், கொல்லப்பட்டவரின் உறவினர் ஒருவரின் மகன் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஹொரணை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக 43 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். 

இதேவேளை, நேற்றிரவு, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு மற்றொரு கொலை இடம்பெற்றுள்ளது. 

கொலை செய்யப்பட்டவர் 44 வயதுடைய மடத்தடி, இருபாலை பகுதியைச் சேர்ந்தவராவார். 

இவர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மடத்தடி பகுதியில் சந்தேகநபர்கள் மறைந்திருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். 

இதன்போது படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05