Jun 14, 2025 - 11:21 AM -
0
மட்டக்களப்பு - வலையிறவு மடத்துப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (14) காலை 7.00 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது.
ஆலய மகா கும்பாபிசேக நிகழ்வுகள், கடந்த வெள்ளிக்கிழமை, ஆலய பிரதம குரு, அருளானந்த சிவாச்சாரியார் குருக்கள் தலைமையில் ஆரம்பமாகியது.
விசேட யாக பூசைகள் இடம்பெற்ற நிலையில், இன்றைய தினமும் நாளையும் (15) எண்ணெய் காப்பு இடம்பெற்றவுள்ளது.
இதேவேளை மகா கும்பாபிஷேகம், எதிர்வரும் வரும் திங்கட்கிழமை (16) ஆம் திகதி இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
--