Jun 15, 2025 - 12:21 PM -
0
யாழ்ப்பாணம் - வடமராட்சி பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கிராம் கஞ்சாவுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் இன்று (15) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது கடல் மார்க்கமாக கொண்டு வந்த கஞ்சாவை இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வு பிரிவினரை கண்ட சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் 220 கிலோ கிராம் கஞ்சாவும், படகும் அதன் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட 220 கிலோ கிராம் கஞ்சா, படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பன பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
--

