செய்திகள்
220 கிலோ கிராம் கஞ்சா பொலிஸாரிடம் கையளிப்பு

Jun 15, 2025 - 09:34 PM -

0

220 கிலோ கிராம் கஞ்சா பொலிஸாரிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி பொலிகண்டி பகுதியில் 220 கிலோ கிராம் கஞ்சாவுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இலங்கை இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடல் மார்க்கமாக கொண்டுவந்த கஞ்சா 220 கிலோ கிராமை இறக்கிக் கொண்டிருந்த போது இராணுவ புலனாய்வுத்துறையினரை கண்டதும் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 

எனினும் 220 கிலோ கிராம் கஞ்சாவும், படகும் அதன் வெளியிணைப்பு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைப்பற்றப்பட்ட 220 கிலோ கிராம் கஞ்சாவையும், படகு மற்றும் வெளியிணைப்பு இயந்திரம் என்பனவற்றை வல்வொட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05