வடக்கு
ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி

Jun 15, 2025 - 09:34 PM -

0

ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வழிபாட்டிற்கு அனுமதி

மக்களின் வேண்டுக்கோளுக்கிணங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இன்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

அந்தவகையில், அனுமதிக்கப்பட்ட இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இராணுவ அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் ஆலயத்திற்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05