செய்திகள்
தானியங்கி வாயிலில் சிக்கி நபரொருவர் மரணம்

Jun 16, 2025 - 03:27 PM -

0

தானியங்கி வாயிலில் சிக்கி நபரொருவர் மரணம்

பேருவளை, சமத் மாவத்தையில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர், தானியங்கி வாயிலில் (Gate) சிக்கி உயிரிழந்துள்ளார். 

தொலை இயக்கி (Remote Control) மூலம் இயக்கப்படும் வீட்டின் பிரதான வாயிலில் சிக்கி இந்த நபர் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

உயிரிழந்தவர் பேருவளை, மஹகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதான முகமது ரிஸான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்து பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05