Jun 17, 2025 - 09:44 AM -
0
குரு, புதன், சூரியனின் சேர்க்கை மிதுனத்தில் நடக்கிறது. கிரகங்களின் சேர்க்கையும், செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த இன்று (17) மேஷம், கடகம், விருச்சிகம் உள்ளிட்ட ராசிகளுக்கு பண ஆதாயமும், சொத்துக்களும் சேர உள்ள வாய்ப்பு உண்டு.
மேஷ ராசி
மேஷ ராசிக்கு இன்றைய பலன் என்னவென்றால், வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. சக ஊழியர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவினால், பொருளாதார ரீதியாக நன்மை கிடைக்கும். உங்கள் பொருளாதார நிலை சீராக இருக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் குழப்பம் நீடிக்கும். இதனால் முடிவெடுப்பதில் சிரமம் ஏற்படலாம். சிறிய விஷயத்துக்குக் கூட கவலைப்படலாம். சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பேச வேண்டியிருக்கும். பொருளாதார ரீதியாக இன்று நல்ல நாளாக இருக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது. நிலம் விற்பனையால் நல்ல லாபம் கிடைக்கும். அதை மீண்டும் முதலீடு செய்து எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்றலாம். குடும்பத்தில் சொத்து சம்பந்தமாக கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே பேசும்போது கவனமாக இருங்கள்.
கடக ராசி
கடக ராசிக்காரர்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். நல்ல செய்தி வரலாம். மன குழப்பம் காரணமாக பெரிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும். பொருளாதார நிலை வலுவடையும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பம் அதிகமாக இருக்கும். செலவுகள் அதிகரிப்பதால் பொருளாதார ரீதியாக கவலைகள் வரலாம். பெரியவர்களின் ஆலோசனை மூலம் பண பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். உணவில் கவனம் செலுத்தாமல் போனால் உடல்நலம் பாதிக்கப்படலாம். வியாபார ரீதியாக இன்று நல்ல நாள்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்க எந்த ரிஸ்க் எடுக்கவும் தயங்க மாட்டார்கள். சமூக தொடர்புகளால் வேலையில் வெற்றி கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்கான வழிகள் உருவாகும். உறவினர்களிடம் இருந்து பொருளாதார உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. சமூக காரியங்களுக்காக செலவு செய்ய நேரிடலாம்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்கள் இன்று தனிமையில் இருக்க விரும்புவார்கள். எதிர்கால திட்டங்கள் பற்றி யோசிப்பீர்கள். முதலீடு செய்வதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பீர்கள். அது எதிர்காலத்தில் உங்களுக்கு லாபம் தரும். வருமானம் குறைவாக இருந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்தி சிக்கனமாக இருப்பீர்கள்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் உள்ளது. உற்பத்தி சம்பந்தமான வேலைகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு தேவையான பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். உற்பத்தி சம்பந்தமான வேலைகள் நல்லபடியாக நடக்கும். ஆனால் மனக்குழப்பம் காரணமாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படலாம். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எதிரிகளிடம் கவனமாக இருங்கள். அவர்கள் உங்களை விட புத்திசாலியாக இருக்கலாம். வரவேண்டிய பணம் வந்து சேர வாய்ப்புள்ளது.
மகர ராசி
மகர ராசிக்காரர்கள் இன்று வேலை செய்யும் இடத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். கடினமாக உழைத்தாலும் உயர் அதிகாரிகள் திருப்தி அடைய மாட்டார்கள். வேலை மாற வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணை அல்லது பார்ட்னரின் உதவி கடினமான வேலைகளைச் செய்ய உதவும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பீர்கள்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபார நிலைமை சரியில்லாமல் போகலாம். பொருளாதார விஷயங்களில் மனக்குழப்பம் ஏற்படும். செலவுகளை சமாளிக்க நெருங்கிய உறவினர்களிடம் உதவி கேட்க வேண்டியிருக்கும்.
மீன ராசி
மீன ராசிக்காரர்கள் இன்று முடிக்கப்படாமல் இருக்கும் வேலைகளை நினைத்து கவலைப்படுவீர்கள். அதிகமாக யோசிப்பதால் டென்ஷன் அதிகமாகலாம். உங்களுடைய திட்டங்களுக்கு உயர் அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார ரீதியாக செலவுகள் அதிகமாக இருக்கும்.