Jun 17, 2025 - 10:26 AM -
0
NDB வங்கியானது இலங்கையின் முக்கிய சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி [SME] துறையின் வளர்ச்சி மற்றும் விருத்திக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) SME அபிவிருத்தி விருதுகள் (SMEDA) 2024க்கான அதிகாரப்பூர்வ வங்கி பங்குதாரராக தனது பங்கை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த மைல்கல் பங்குடைமையானது , நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவன நிலப்பரப்பை செயற்படுத்தும் தொழில்முயற்சியாளர்கள் மனப்பான்மை மற்றும் சந்தைப்படுத்தல் சிறப்பை அங்கீகரித்து ஆதரிப்பதில் NDB இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, இடம்பெறவுள்ள SLIM SME அபிவிருத்தி விருதுகள், SLIM இன் மீள் ஆரம்ப தளத்தின் கீழ் ஒரு முன்னோடி முயற்சியாகும். இந்த விருதுகள் நிகழ்வானது தமது தொழில்களுக்குள் விதிவிலக்கான சந்தைப்படுத்தல், வர்த்தகநாமம் மற்றும் விற்பனை உத்திகளை வெளிப்படுத்திய நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு வெகுமதி அளித்து அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விருதுகள் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன, அவற்றில் ஆண்டின் சிறந்த SME நிறுவனம் மற்றும் 14 பல்வேறு தொழில்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துறை சார்ந்த விருதுகள் அடங்கும். இந்த விருதுகள் நிகழ்ச்சித் திட்டம் தகவல் தொழில்நுட்பம் [IT], டிஜிட்டல் மற்றும் இணையத்தள சில்லறை விற்பனை, விவசாயம் மற்றும் பால் பொருட்கள், FMCG, விருந்தோம்பல், ஏற்றுமதி, B2B, சுகாதாரம், போஷணை ஆடை வகைகள் மற்றும் பல துறைகளில் உள்ள வர்த்தகங்களை உள்ளடக்குகிறது - இது இலங்கையின் SME திறன்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
இந்த பங்குடைமை தொடர்பாக NDB வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கெலும் எதிரிசிங்க தெரிவிக்கையில் , SME துறையானது இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தின் முதுகெலும்பு என்று நாம் நம்புகிறோம். SLIM உடனான எமது பங்குடைமை மற்றும் SMEDA 2024க்கான அதிகாரப்பூர்வ வங்கி பங்குதாரராக எமது பங்கு மூலம், புத்தாக்கமான மற்றும் மீள்தன்மை கொண்டதாக மட்டுமல்லாமல், தமது வர்த்தகங்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முயற்சிக்கும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முயற்சிகளை நாம் ஆதரிக்கிறோம்.
இலங்கையின் முன்னணி நிதியியல் நிறுவனங்களில் ஒன்றான NDB வங்கியானது, SME அபிவிருத்தியில் நீண்ட காலமாக முன்னணியில் உள்ளதுடன் இந்த துடிப்பு நிறைந்த துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பரந்த அளவிலான வங்கி தீர்வுகளை வழங்குகிறது. சிறப்பு SME கடன் திட்டங்கள் முதல் ஆலோசனை ஆதரவு மற்றும் ஏற்றுமதி வசதி வரை, நாட்டின் தொழில்முயற்சியாளர் சமூகத்திற்கான முன்னேற்றத்தில் NDB ஒரு உண்மையான பங்காளியாக தொடர்ந்து செயல்படுகிறது.
SMEDA 2024 போன்ற மூலோபாய ஒத்துழைப்புகள் மூலம், NDB வங்கி ஒரு நிதியாளராக மட்டுமல்லாமல், இலங்கை நிறுவனங்களின் வெற்றியாளராக - புத்தாக்கம் , சந்தைப்படுத்தலில் சிறப்பு மற்றும் தொழில்முயற்சியாளர்களின் நீடித்த உணர்வைக் கொண்டாடுவதில் தனது பங்கை வலுப்படுத்துகிறது.

