Jun 17, 2025 - 11:48 AM -
0
பரி.தோமாவின் கல்லூரி மற்றும் புனித.செர்வடியஸ் கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 125 ஆவது “றுகுண நீலங்களுக்கிடையிலான சமர்” போட்டிகளின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் பங்காளராக SLT-MOBITEL கைகோர்த்திருந்தது. இந்தப் போட்டிகள் 2025 ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடைபெற்றன.
பாரம்பரியம் மற்றும் விளையாட்டுத் திறமையால் நிரம்பிய மூன்று நாள் கிரிக்கெட் போட்டி, இரு புகழ்பெற்ற பாடசாலைகளின் திறமைகளை வெளிப்படுத்தியதால், மாத்தறையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உயன்வத்த மைதானத்தின் உயிர்ப்படைந்தது. இரு அணிகளின் அற்புதமான ஆட்டங்கள் வெளிப்பட்ட போதிலும், நிலவிய மோசமான வானிலை காரணமாக போட்டி சமநிலையில் முடிந்தது.
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், சென்.சேர்வடியஸ் கல்லூரியின் அணித் தலைவரும், பரி.தோமாவின் கல்லூரியின் பழைய மாணவரும், இலங்கை கிரிக்கட் அணியில் விளையாடியவருமான இந்திக டி சேரம் ஆகியோரை கௌரவிக்கும் வகையில், “சனத் ஜயசூரிய – இந்திக டி சேரம் கிண்ணம்” என இந்த கிரிக்கட் போட்டி பல வருடங்களாக முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு இரண்டு பாடசாலைகளுக்கும் இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்தியதுடன், விளையாட்டு, கல்வி மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளைக் கொண்டாடுவதில் மாத்தறை சமூகத்தை ஒன்றிணைத்தது. இந்த சந்திப்பு தென் மாகாணம் முழுவதிலுமிருந்து உற்சாகமான ஆதரவாளர்கள், பழைய மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களைக் பெருமளவில் ஈர்த்திருந்தது. இந்தப் போட்டியில் இரு அணிகளின் சிறப்பான செயல்திறன்களும், ஈர்க்கக்கூடிய திறமை மற்றும் உறுதிப்பாடு ஆகியவை உள்ளடங்கியிருந்தன. உற்சாகமான போட்டி, இரு பாடசாலைகளும் பல தசாப்தங்களாக வளர்த்து வரும் ஒழுக்கம், குழுப்பணி மற்றும் சிறப்பின் மதிப்புகளையும் நிரூபித்தது.
சென்.சேர்வடியஸ் கல்லூரியின் விரான் சமுதித்த, ஆட்ட நாயகனாக தெரிவாகியிருந்தார். இவருக்கான அன்பளிப்பை, SLT-MOBITEL இன் குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க வழங்கியிருந்தார். நிறைவு செய்யும் வைபவத்தின் விசேட அதிதியாகவும், ஆரம்ப நாள் நிகழ்வில் சிறப்பு அதிதியாகவும் இவர் கலந்து கொண்டார். நிகழ்வில் SLT-MOBITEL இன் பிரதிநிதிகளான ஹசரங்க விதானபத்திரன, மாகாண வியாபார – பிரதி பொது முகாமையாளர் மற்றும் இதர அதிகாரிகள் சிலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
SLT-MOBITEL, பார்வையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு விரிவான இணைப்பு தீர்வுகளை வழங்குவதில் தனது ஆதரவை வழங்கியதுடன், போட்டியின் நேரடி ஒளிபரப்பை நாடு முழுவதும் எளிதாக்கியது. நிறைவு விழாவின் போது பார்வையாளர்களுக்கு ஒரு துடிப்பான மற்றும் மறக்கமுடியாத சூழ்நிலையை உருவாக்க, புதுமையான வர்த்தகநாமமிடல் மூலம் நிகழ்வு அனுபவத்தை நிறுவனம் மேலும் மேம்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு போட்டியின் உற்சாகத்தையும் பாரம்பரியத்தையும் அனுபவிக்க இது உதவியது.
றுகுண நீலங்களுக்கிடையிலான சமர், தென் மாகாணத்தின் கிரிக்கட் திறமையை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, மாத்தறை மாவட்டத்தின் சிறுவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவதாக அமைந்திருந்தது. அதனூடாக, நிறுவனத்துக்கு உள்ளூர் சமூகத்துடன் அர்த்தமுள்ள மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஈடுபாட்டை உருவாக்க முடிந்துள்ளது. இலங்கை முழுவதும் விளையாட்டு சிறப்பைக் கட்டியெழுப்புவதற்கான SLT- MOBITEL இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் இந்த முயற்சி ஒன்றிணைந்துள்ளது.
இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, SLT-MOBITEL இரு அணிகளுக்கும் புதுமையான Hello AI Student Package ஐ வழங்கியது. இலங்கையில் முதன்முறையாக 10 சிறப்பு செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்கான அணுகலை உள்ளடக்கிய இந்த சிறப்பு மொபைல் தொகுப்பு, விளையாட்டு சிறப்பை தொழினுட்ப முன்னேற்றத்துடன் இணைப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.
இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனர் எனும் வகையில், சமூகங்களுக்கு விளையாட்டுகள் மற்றும் றுகுண நீலங்களுக்கிடையிலான சமர் போன்ற பெருமைக்குரிய களங்களினூடாக, இளைஞர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்றவற்றினூடாக வலுவூட்டுவதற்கு SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளது.