வணிகம்
செலான் வங்கி VIMAN உடன் இணைந்து தனித்துவமான வீடமைப்புக் கடன் தெரிவுகளை அறிமுகப்படுத்துகிறது

Jun 17, 2025 - 12:02 PM -

0

செலான் வங்கி VIMAN உடன் இணைந்து தனித்துவமான வீடமைப்புக் கடன் தெரிவுகளை அறிமுகப்படுத்துகிறது

VIMAN இடமிருந்து வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ள ​​வாடிக்கையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வீடமைப்புக் கடன் வசதியுடன் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செலான் வங்கி VIMAN உடன் அண்மையில் கைகோர்த்துள்ளது. நாட்டின் முன்னணி real estate developersகளில் ஒன்றான John Keells Properties இன் ஆதரவு மற்றும் பலப்படுதலுடனான இந்த இணைவு, செலான் வங்கி மற்றும் VIMAN ஆகிய இரண்டிற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். இது அன்புடன் அரவணைக்கும் வங்கி மற்றும் VIMAN ஆகிய இரண்டிற்கும் கவர்ச்சிகரமான வீடமைப்பு கடன் தீர்வுடன் வீடொன்றை சொந்தமாக்க முயலும் வாடிக்கையாளர்களின் கனவுகளை நனவாக்க வாய்ப்பை அளிக்கின்றது. இந்த முயற்சி, மிக முக்கியமாக, வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு இல்லத்தை நிறைவு மற்றும் நல்வாழ்வை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையுடன் இணைந்த நவீன வசதிகளுடன் கூடிய சூழலில் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. 

செலான் வங்கி தனது வீடமைப்புக் கடன் வசதிகளை அதிகபட்சமாக 25 ஆண்டுகளுக்கு வழங்கும் அதே வேளை தகுதியுள்ள எந்தவொரு வாடிக்கையாளர்களுக்கும் 7 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்படும். வாடிக்கையாளரின் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பிடுவதன் மூலம் விற்பனை மதிப்பின் 75%க்கு கடனைப் பெறக் கூடியதாக இருக்கும். மேலும் செலான் வீடமைப்புக் கடன், 9.5% (A.I.R) இலிருந்து தொடங்கும் கவர்ச்சிகரமான வட்டி வீதத்தையும் வழங்குகிறது. 

வாடிக்கையாளர்களுக்கான செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தவும் இலகுவாக்கவும் வங்கியின் வீடமைப்புக் கடன் நிபுணர்கள் நிதி நடவடிக்கைகளை எளிதாக்குவதுடன் கடன் விண்ணப்பம் தொடக்கம் ஒப்புதல் வரை நட்புறவான சேவையை வீட்டிற்கு வந்து வழங்குவார்கள். செயல்முறை மற்றும் போட்டிமிக்க வட்டி வீதங்கள் குறித்து நிபுணர்கள் இலவச ஆலோசனைகளை வழங்குவார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன் செயல்முறை தொடங்கிய பின்னர் அதன் சமீபத்திய முன்னேற்றம் குறித்து அவர்களுக்குத் தொடர்ந்து தெரிவிப்பார்கள்.கடன் பெறுவதற்கான தெரிவுகள் தொடர்பாக அறிய விரும்பும் வாடிக்கையாளர்கள் வங்கியின் நாடு தழுவிய கிளை வலையமைப்பு ஊடாக அவற்றை பெற்றுக் கொள்ளலாம். இந்த இணைவு குறித்து கருத்து தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, “VIMAN உடனான எங்கள் கூட்டாண்மை மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது தெரிவு செய்யக்கூடிய எங்கள் சேவைத் தொகுப்பை விரிவுபடுத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வீடொன்றை கட்டும் போது ஒவ்வொரு வாய்ப்பையும் சிறப்பாகப் பயன்படுத்த எங்கள் வாடிக்கையாளர்கள் தகுதியானவர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். VIMAN உடனான எமது இணைவானது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வீட்டை அணுகுவதற்கான பாதையை வழிவகுக்கும் ஒரு படிக்கல்லாக அமைகிறது.” என்றார். 

VIMAN ஐப் பிரதிநிதித்துவப்படுத்தி, John Keells Propertiesஇன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவரும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணைத் தலைவருமான நதீம் ஷம்ஸ் கருத்து தெரிவிக்கையில், “John Keells Propertiesஇல் நம்பகமான கூட்டாண்மைகளால் ஆதரிக்கப்படும் வாழ்விடங்களை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். செலான் வங்கியுடனான இந்த இணைவு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உரிமையை மேலும் அணுகக்கூடியதாகவும் தடையற்றதாகவும் மாற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். செலான் வங்கியின் நெகிழ்வான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வீடமைப்புக் கடன் தீர்வுகளின் ஆதரவுடன் அதிகமான தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் VIMAN உடன் தங்கள் வீட்டு உரிமையாளர் பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். என்றார். 

செலான் வங்கியின் வீடமைப்புக் கடன் வசதி பற்றிய மேலதிக தகவலுக்கு, 011 2008888 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05