Header Logo

வணிகம்
ஆர்பிகோ NextGen மெத்தைகளை அறிமுகம் செய்துள்ளது Profile Cut Air Cooling Pocket தொழினுட்பத்தைக் கொண்ட இலங்கையின் முதலாவது மெத்தை

Jun 17, 2025 - 12:58 PM -

0

ஆர்பிகோ NextGen மெத்தைகளை அறிமுகம் செய்துள்ளது Profile Cut Air Cooling Pocket தொழினுட்பத்தைக் கொண்ட இலங்கையின் முதலாவது மெத்தை

இலங்கையின் மெத்தைகள் தொழிற்துறையில் நீண்ட காலமாக முன்னோடியாகத் திகழும் ஆர்பிகோ, air cooling pocket தொழினுட்பத்துடனான NextGen மெத்தை தெரிவுகளை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. உள்நாட்டு சந்தையில் புத்தாக்கமான இந்த மெத்தை தெரிவுகளின் அறிமுகம், கொழும்பு Ramada by Wyndham இல் 2025 ஜுன் 13 ஆம் திகதி நடைபெற்றது. 

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகப் பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜேயசிங்கவினால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த Arpico NextGen தெரிவுகளினூடாக, சமூகங்களுக்கு உயர் உறக்கத் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஆர்பிகோவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மெத்தைகளின் அறிமுகத்துடன், சிறந்த உறக்கத்துக்கான உரிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் அதன் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளமை மட்டுமல்லாது, முன்னேற்றகரமான புத்தாக்கத்துக்கான உறுதி மொழியையும் மீள உறுதி செய்துள்ளது. 

இந்த புதிய மெத்தை தெரிவுகளில் Profile cut air-cooling pocket தொழினுட்பம் உள்ளடங்கியுள்ளதுடன், நவீன வசதிகள் படைத்த German Computer Numerical Control (CNC) ஃபோம் வெட்டும் தொழினுட்பத்தைக் கொண்டு, சிறந்த குளிர்விப்பு மற்றும் மெத்தையின் புத்துணர்வூட்டும் கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அதனூடாக உறக்கத்தின் தரம் வினைத்திறனான வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. முறையான உறக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, Arpico NextGen இல் பயன்படுத்தப்பட்டுள்ள நவீன தொழினுட்பத்தினூடாக சிறந்த ஓய்வு வழங்கப்படுவதுடன், உறங்குவோருக்கு புத்துணர்வுடன் உறக்கத்திலிருந்து எழும் வகையிலான அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. 

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகப் பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜேயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “தரமான உறக்கத்தினூடாக, உற்பத்தித்திறன் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை மேம்படுத்தப்படுகிறது என்பதில் நாம் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளோம். எமது தவிசாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி/முகாமைத்துவ பணிப்பாளர், கலாநிதி. சேன யத்தெஹிகே அவர்களின் நோக்கத்துக்கமைய, ஆர்பிகோவைச் சேர்ந்த எமது பணிகளினூடாக, எமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற விற்பனை அனுபவத்தை பெற்றுக் கொடுப்பது மாத்திரமன்றி, தமது தினசரி வாழ்க்கையில் சிறப்பாக இயங்குவதற்கு அவசியமான தரமான உறக்கத்தை பெற வசதியை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. அதற்காக, எமது தயாரிப்புகளை புத்தாக்கமான வகையில் வடிவமைப்பதில் தொடர்ச்சியான முயற்சிகளில் முதலீடுகளை மேற்கொள்வதுடன், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழினுட்பங்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு அவசியமான உறக்கத் தீர்வுகளை வழங்குகிறோம்.” என்றார். 

பொலியுர்தீன் ஃபோம் மற்றும் ஸ்பிரிங் மெத்தைகள், ஷீட்கள், குஷன்கள் மற்றும் சிலிக்கன் ஃபைபர் தலையணைகள் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் ஆர்பிடெக் (பிரைவட்) லிமிடெட், நான்கு தசாப்த கால கூட்டாண்மை அனுபவத்தை தன்வசம் கொண்டுள்ளது. 

பெருமைக்குரிய ISO 9001-2015 நியமத்தை பெற்றுள்ளதுடன், தனது புகழ்பெற்ற ஆர்பிபோமுக்காக SLS நியமத்தை ஆர்பிகோ பின்பற்றுகின்றது. நம்பிக்கையை வென்ற நாமமாக ஆர்பிடெக் (பிரைவட்) லிமிடெட் திகழ்வதுடன், தனது தற்போதைய தாய் நிறுவனமான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியிடமிருந்து ஒன்பது தசாப்த கால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1932 ஆம் ஆண்டில் எரிபொருள் நிரப்பு நிலையம் என்பதிலிருந்து ஆரம்பித்த ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி, நாட்டின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமாக வளர்ச்சியடைந்து, விற்பனை, பெருந்தோட்டங்கள், இறப்பர், தளபாடங்கள், டயர்கள், பிளாஸ்ரிக்கள், காப்புறுதி, பங்கு முகவர், நிதிச் சேவைகள் மற்றும் சரக்குக் கையாளல் போன்ற பிரிவுகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மாபெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதுடன், சிறந்த வருடாந்த புரள்வையும் கொண்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title