வணிகம்
SLT-MOBITEL பொசொன் விளக்கீட்டு பூஜையில் பங்கேற்று பாரம்பரிய அம்சங்களில் தனது அர்த்தமுள்ள ஈடுபாட்டை உறுதி செய்தது

Jun 17, 2025 - 01:05 PM -

0

SLT-MOBITEL பொசொன் விளக்கீட்டு பூஜையில் பங்கேற்று பாரம்பரிய அம்சங்களில் தனது அர்த்தமுள்ள ஈடுபாட்டை உறுதி செய்தது

இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனரான SLT- MOBITEL, அண்மையில் நடைபெற்ற புனித பொசொன் விளக்கீட்டு பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தது. 

இலங்கை அரசாங்கத்தினால் மிஹிந்தலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வினூடாக, இலங்கையின் ஆழமான சமய பாரம்பரியம் வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான யாத்திரிகர்களை கவர்ந்திருந்தது. இந்த ஆண்டின் விளக்கீட்டு பூஜை நிகழ்வில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்றிருந்தார். வலையமைப்பை ஏற்படுத்துவதற்கு அப்பாலான தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், நிலைபேறாண்மை, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் சமூக வலுவூட்டல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் செயற்பாடுகளில் SLT-MOBITEL தன்னை ஈடுபடுத்திய வண்ணமுள்ளது. பிரதிபலிப்பு, ஒற்றுமை மற்றும் ஆன்மீக அர்ப்பணிப்பு ஆகியன நிறைந்த பொசொன் பௌர்ணமியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், SLT-MOBITEL இனால் யாத்திரிகர்களுக்கு அனுபவத்தை மேம்படுத்துவதற்கான பிரதான உட்கட்டமைப்பு ஆதரவு வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தின் சூழல், சமூக மற்றும் ஆளுகை அர்ப்பணிப்புக்கமைய, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘Data Dansala’ ஊடாக, பங்கேற்றிருந்தவர்களுக்கு டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு, சமயசார் நிகழ்வுகளில் ஈடுபடுகையில் தமது அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதி செய்திருந்தது. 

மேலும், அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு இலவச பேருந்து போக்குவரத்து சேவையையும் SLT- MOBITEL முன்னெடுத்திருந்தது. அதனூடாக பெருமளவானோருக்கு இந்த விளக்கீட்டு பூஜையில் பங்கேற்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. சமூக சென்றடைவை வலிமைப்படுத்தி, SLT- MOBITEL இனால் ஐஸ்கிறீம் தன்சல் வழங்கும் நிகழ்வும் அதன் அனுராதபுர கிளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனூடாக யாத்திரிகர்கள் மத்தியில் குதூகலம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பொசொன் விளக்கீட்டு பூஜை நிகழ்வு, யாத்திரிகர்களை ஈடுபடுத்தியிருந்த நிகழ்வாக அமைந்திருந்ததுடன், நவீன டிஜிட்டல் அணுகலுடன் அனுகூலம் பெறக்கூடிய வகையிலும் அமைந்திருந்தது. 

மேலதிக தகவல்களுக்கு www.sltmobitel.lk ஐ பார்க்கவும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05