கிழக்கு
45 நாட்களில் 4,000 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் இளைஞன்!

Jun 17, 2025 - 02:14 PM -

0

45 நாட்களில் 4,000 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும் இளைஞன்!


பதுளை, வெலிமடை - குருத்தலாவ பிரதேசத்தில் இருந்து கரையோர பிரதேசங்கள் ஊடாக 45 நாட்களில் 4,000 கிலோ மீட்டர் தூரத்தை நடக்க துணிந்த 48 வயது இளைஞன் திங்கட்கிழமை மாலை அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியை சென்றடைந்தார். 

தற்போது மருதமுனை பகுதிக்கு 27 வது நாளில் வந்துள்ளதாகவும் தனது ஊர் வெலிமடை குருத்தலாவ என்றும் கரையோரங்களை தற்போது சுற்றி வருகை தந்துள்ளதாகவும் பொத்துவில் பகுதிக்கு சென்று பின்னர் பதுளைக்கு சென்று மீண்டும் தனது ஊரை அடைவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ள 

இன்னும் தனக்கு 17 நாட்கள் இருப்பதாகவும் 14 நாட்களில் இந்த பயணத்தை நிறைவு செய்தால் புதிய ஒரு சாதனை ஒன்றினை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05