Jun 17, 2025 - 02:21 PM -
0
செலிங்கோ லைஃப் ஆனது நிறுவனத்தின் குடும்ப சவாரி பாரிய ஊக்குவிப்பு திட்டத்தின் 18வது பதிப்பின் கீழ் காப்புறுதிதாரர் குழுவொன்றிற்கு அண்மையில் சீனாவின் மிகப்பாரிய நகரங்களில் ஒன்றாக திகழும் ஷாங்காயில் விடுமுறையை கழிப்பதற்கான அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது.
இதற்கிணங்க ஐந்து செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட 20 பேர் கொண்ட குழுவானது, ஷாங்காயில் நான்கு இரவுகள் மற்றும் ஐந்து பகல்களை மகிழ்ச்சிகரமாக கழிப்பதற்கான வாய்ப்பினை பெற்றதுடன் மேலும் டிஸ்னிலேண்டில் முழு நாளை கழித்ததுடன் உலகின் வேகமான ரயிலான மாக்லேவ் ரயிலில் பயணம் செய்து, யூ கார்டன், ஜேட் கோயில், ஷாங்காய் கோபுரம், ஆகியவற்றை கண்டு கழித்ததுடன் {ஹவாங்பு நதியில் படகு பயணம் மூலம் ஜுஜியாஜியாவோ நீர் நகரத்திற்கு பயணம் புரிந்ததுடன் அக்கோரபட்டிக் நிகழ்வொன்றையும் கண்டு களித்தனர்.
இந்த குழுவினர் ஷாங்காயில் மகிழ்ச்சிகரமான விடுமுறையை கழிப்பதற்காக குடும்ப சவாரி வர்த்தகநாம தூதுவர்களான பிரபல நடிகர் ரோஷன் ரணவான, அவரது மனைவி குஷ்லானி மற்றும் அவர்களது மகன் மினெத் ஆகியோருடன் பயணம் செய்தனர். விமான டிக்கெட்டுகள், தங்குமிடம், உணவு, தரைவழி போக்குவரத்து மற்றும் சுற்றுலா பயணங்களுக்கான அனைத்து செலவுகளையும் செலிங்கோ லைஃப் பொறுப்பேற்று இருந்தது.
இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் மிகப்பாரிய நிறுவனமாக மற்றும் நீண்டகாலமாக இயங்கி வரும் செலிங்கோ லைஃப்பின் குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டத்தின் வெற்றியாளர்களான 250 செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 1,000 பேர் பேர்ல் பே தீம் பூங்காவிற்கு ஒரு நாள் விஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற இந்த ஷாங்காய்க்கான விஜயமானது மிகவும் உற்சாகமாக இருந்தது.
இதேவேளை மேலும் 10 செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர் குடும்பங்கள் இந்த ஜூன் மாதம் மலேசியாவில் விடுமுறையை கழிக்கும் வாய்ப்பினை வென்றுள்ளன. இதற்கிணங்க மொத்தமாக,1,060 தனிநபர்களைக் கொண்ட 265 செலிங்கோ லைஃப் காப்புறுதிதாரர்கள் 18ஆவது குடும்ப சவாரி நிகழ்வில் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2025 ஆம் ஆண்டில் தொடர்ந்து 19 வது ஆண்டாக மக்களின் ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராக வாக்களித்தது, தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் 'ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக' தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது. செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 21 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.