Jun 17, 2025 - 04:30 PM -
0
இலங்கையில் யமஹா வர்த்தகநாமத்தின் ஏகபோக விநியோகத்தரும், 75 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் மோட்டார் வாகனத் துறையில் நம்பிக்கைக்குரிய நாமமாகவும் திகழ்ந்து வருகின்ற அசோசியேட்டட் மோட்டார்வேஸ் (பிரைவேட்) லிமிட்டெட் (AMW), யமஹா மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் உள்நாட்டுச் சந்தையில் மீண்டும் கிடைக்கப்பெறுகின்றமையை பெருமையுடன் அறிவித்துள்ளது. வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 2025 பெப்ரவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவது குறித்து இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த மீள்அறிமுகம் இடம்பெறுவதுடன், இலங்கை வீதிகளில் ஐந்து ஆண்டுகளாக உலா வந்திராத யமஹா தற்போது மீண்டும் கம்பீரமாக உலா வரவுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தைக் குறிக்கும் வகையில், 2025 ஜுன் 14 அன்று மிகவும் பிரமாண்டமான அறிமுக நிகழ்வை AMW ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையில் முதல்முறையாக யமஹாவின் புத்தம்புதிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் தனித்துவமான அணிவகுப்பு கண்காட்சி முறை கொண்டாட்டமாக இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டன. செயற்திறன், பாணி, மற்றும் புதுமை ஆகியவற்றின் மீது இந்த வர்த்தகநாமம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு இந்த அணிவகுப்பு கண்காட்சியின் மூலமாக சிறப்பாக காண்பிக்கப்பட்டது. வெறுமனே ஒரு தயாரிப்பின் அறிமுகம் என்பதற்கும் அப்பால், தன்னம்பிக்கை மற்றும் திறமையுடன் யமஹாவின் மீள்வரவை இந்த நிகழ்வு அடையாளப்படுத்தியுள்ளது.
இப்புதிய வடிவங்கள் இலங்கையில் ஓட்டுனர்களின் பல்வகைப்பட்ட தேவைப்பாடுகளுக்கு ஏற்ற வகையில் மிகக் கவனமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஆகிய இரண்டும் மிகச் சிறந்த தயாரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் எரிபொருள் திறன் கொண்டவையாகக் காணப்படுகின்றன. அவற்றுள் சிறப்பம்சமாக அமைந்த Yamaha RayZR 125, லீட்டர் ஒன்றுக்கு 71 கிமீ என்ற வியத்தகு எரிபொருள் பாவனைத்திறனைக் கொண்டுள்ளதுடன், மதிப்பையும், பல்வகை ஆற்றலையும் விரும்புகின்ற வாடிக்கையாளர்களுக்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் மற்றும் சந்தையின் தேவை ஆகியவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தயாரிப்பு வடிவங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இயந்திரப் பொறியியலில் வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் அளிப்பதில் யமஹாவின் அணுகுமுறையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
யமஹாவின் மீள்வருகை என்பது வெறுமனே இயந்திரங்களின் அறிமுகம் மாத்திரமல்ல, மாறாக இது அவற்றை ஓட்டவுள்ள மக்கள் தொடர்பானது. தயாரிப்பின் விவரக்குறிப்புக்கள் மற்றும் சிறப்பம்சங்களில் மாத்திரம் கவனம் செலுத்தும் தந்திரோபாயத்துடன் கூடிய மோட்டார் சைக்கிள் விளம்பரங்கள் நிறைந்துள்ள ஒரு சந்தையில், மனிதம் தொடர்பான ஒரு வேறுபட்ட கதையை வெளிப்படுத்துவதை யமஹா தேர்ந்தெடுத்துள்ளது. “Built to Ride” என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்ற புதிய விளம்பர பிரச்சாரம், எப்போதும் தமது வாழ்வில் இயங்கிக் கொண்டிருக்கின்ற, தமது சவாரியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் ஒன்றாக உணர்வதை விடுத்து, அதனை உயிரோட்டத்துடன் அனுபவிக்கின்ற விரும்புகின்ற இலங்கையிலுள்ள ஓட்டுனர்களின் உற்சாகம் மிக்க மன உறுதி, நெகிழ்திறன் மற்றும் தனித்துவம் ஆகியவற்றை வசப்படுத்துவதாக உள்ளது. தயாரிப்புக்களை காட்சிப்படுத்தும் விளம்பரங்கள் அல்லாது, உண்மையான அனுபவங்களின் அடிப்படையில் இந்த விளம்பரப் பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மோட்டார் சைக்கிள்கள் மக்களை வரையறுக்காது - மோட்டார் சைக்கிள்கள் எப்படி இருத்தல் வேண்டும் என்பதை மக்கள் வரையறுக்க வேண்டும் என்பதில் யமஹா நம்பிக்கை கொண்டுள்ளது.
“யமஹா எப்போதும் புத்தாக்கம், உற்சாகம், மற்றும் ஒப்பற்ற சவாரி அனுபவம் ஆகியவற்றைத் தாங்கி நின்றுள்ளது. எமது மீள்வருகை என்பது வெறுமனே புதிய தயாரிப்பு வடிவங்களின் வருகை மாத்திரமல்ல, இது இலங்கையில் ஓட்டுனர்களின் பயணத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கும் ஒரு தருணம். புத்தம்புதிய வடிவமைப்பு வரிசை மற்றும் ஒரு போதும் இல்லாத அளவில் பிரமாண்டமான அறிமுக நிகழ்வு ஆகியவற்றுடன், உள்நாட்டு இருசக்கர துறையில் புதிய தர ஒப்பீட்டை நாம் நிலைநாட்டியுள்ளோம்,” என்று AMW ன் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் ஆன்ட்ரே போன்துயிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.
நம்பிக்கை, மகத்தான சேவை, மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றின் AMW கொண்டுள்ள பாரம்பரியம் சந்தையில் யமஹாவின் மீள்வருகைக்கு மிகுந்த பக்கபலமாகக் காணப்படுகின்றது. தரமான சேவை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீளவும் உறுதிப்படுத்தும் வகையில், Sri Lanka Technician Grand Prix 2024 நிகழ்வை AMW அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. யமஹாவின் உலகளாவிய குறிக்கோளான Kando” என்பது, தலைசிறந்த மதிப்பு மற்றும் பெறுபேற்றுத்திறன் மூலமான அனுபவங்களால் எழுகின்ற ஆழ்ந்த திருப்தி மற்றும் உற்சாகம் இந்த மீள்அறிமுக நிகழ்வின் மையமாக அமைந்ததுடன், இவற்றை ஓட்டுகின்ற ஒவ்வொருவரும் வெறுமனே வாகனத்தை ஓட்டுகின்றோம் என்பதை விடுத்து, அனுபவத்தைப் பெற்றுக்கொள்கிறோம் என்ற உணர்வைக் கொண்டிருப்பதை உறுதி செய்கின்றது.
தற்போது திரைநீக்கப்பட்டு, சக்கரங்கள் இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், யமஹாவின் மீள்வருகை இலங்கையின் போக்குவரத்து துறைக்கு மீள்வடிவம் கொடுக்கவுள்ளது. உண்மையாக Built to Ride என்ற தத்துவத்தைப் பின்பற்றி, உற்சாக உணர்வின் வலுவூட்டலுடன், பெறுபேற்றுத்திறன், நம்பகத்தன்மை, மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் புதிய அத்தியாயத்தை உள்வாங்கி, அதனை அனுபவிக்குமாறு மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் மற்றும் புதிதாக மோட்டார் சைக்கிளை ஓட்டத் திட்டமிட்டுள்ள அனைவருக்கும் AMW அழைப்பு விடுக்கின்றது.