Jun 17, 2025 - 05:41 PM -
0
யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை குறித்த வீதியில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு, நேரத்தை மாலை 7 மணி வரை நீடித்து தர வேணடும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனிடம் மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, உறுப்பினர் இளங்குமரன் இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
இந்நிலையில் இராணுவ அதிகாரியிடம் கலந்துரையாடப்பட்டு வீதியின் போக்குவரத்து மாலை 7 மணி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
--

