Jun 17, 2025 - 05:45 PM -
0
பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று (17) ஆரம்பமான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதலாம் நாள் ஆட்டத்தின் நிறைவின் போது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 292 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக Najmul Hossain Shanto 136 ஓட்டங்களையும், Mushfiqur Rahim 105 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்கமால் உள்ளனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Tharindu Rathnayake 2 வீக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.