வணிகம்
DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ள iConnect 2.0: வணிகத்தின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வங்கிச்சேவைத் தளம்

Jun 17, 2025 - 06:57 PM -

0

DFCC வங்கி அறிமுகப்படுத்தியுள்ள iConnect 2.0: வணிகத்தின் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வங்கிச்சேவைத் தளம்

DFCC வங்கி பிஎல்சி தனது பிரதான டிஜிட்டல் வர்த்தக வங்கிச்சேவைத் தளமான DFCC iConnect 2.0 ஐ உத்தியோகபூர்வமாக மீளவும் அறிமுகம் செய்து வைத்துள்ளதுடன், டிஜிட்டல்ரீதியாக மேம்பட்ட, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்குவதில் தான் காண்பிக்கும் அர்ப்பணிப்பை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. வேகம், பாதுகாப்பு, மற்றும் துல்லியம் ஆகியவற்றுடன் கட்டமைக்கப்பட்டுள்ள iConnect 2.0, பண முகாமைத்துவத்தையும், வாணிப சேவைகளையும் தனித்த, ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட தளமொன்றுடன் முழுமையாக ஒன்றிக்கச் செய்துள்ள ஒரு வலுவான வாணிப நிதிக் கூறான TradeConnect ஐ தற்போது உள்ளடக்கியுள்ளது. 

இலங்கையில் வணிகங்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மத்தியில் பரிணாம மாற்றங்கண்டு வருகின்ற தேவைகளுக்கு நேரடியாக பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட DFCC iConnect 2.0 ஆனது வழக்கமான டிஜிட்டல் வங்கிச்சேவைக்கும் அப்பாற்பட்டது. வாடிக்கையாளர்கள் தமது நிதித்தொழிற்பாடுகளை இலகுபடுத்தி, கட்டுப்பாட்டை மகத்தான அளவில் தமது கைகளில் எடுத்து, மற்றும் நம்பிக்கையும் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு உதவுகின்ற மூலோபாயரீதியான ஒரு உந்துசக்தியாகும். அன்றாட வங்கிச்சேவையையும், சிக்கலான வாணிப பணிப்பாய்வுகளையும் தனித்த, பாதுகாப்பான, மற்றும் நிகழ்நேர இடைத்தளமொன்றினூடாக ஒருங்கிணைப்பதனூடாக, வணிகங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதேசமயம், தமது நிதியை வெளிப்படைத்தன்மையுடனும், திறன்மிக்க வழியிலும் நிர்வகிப்பதற்கு அவர்களுக்கு இத்தளம் வலுவூட்டுகிறது. 

DFCC வங்கி பிஎல்சியின் சிரேஷ்ட உப தலைவரும், வர்த்தக வங்கிச்சேவைக்கான தலைமை அதிகாரியுமான சொஹாந்த விஜேசிங்க அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “DFCC வங்கியைப் பொறுத்தவரையில், சேவை, எளிமை, மற்றும் நம்பிக்கை ஆகிய கோட்பாடுகளை அத்திவாரமாகக் கொண்டே டிஜிட்டல் வங்கிச்சேவை தொடர்பான எமது அணுகுமுறை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட தொழிற்பாட்டு அம்சங்கள் மாத்திரமன்றி, எமது வாடிக்கையாளர்கள் தாம் வெற்றி காண்பதற்குத் தேவையான நெகிழ்திறனுடனும் மற்றும் பதில் நடவடிக்கையை முன்னெடுக்கும் ஆற்றலுடனும் அவர்களுக்கு உதவும் வகையில் iConnect 2.0 மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிற்துறை மட்டத்திலான பயனர் கட்டுப்பாடுகள், நிகழ்நேர மொபைல் வழி அங்கீகார அனுமதிகள், அல்லது பிரத்தியேகமான வாடிக்கையாளர் உதவி என இத்தளத்தின் ஒவ்வொரு கூறும் சிக்கல்களைக் குறைத்து, வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்று குறிப்பிட்டார். 

வர்த்தக வங்கிச்சேவை அனுபவத்தை மேம்படுத்தும் விரிவான சிறப்பம்சங்கள் கொண்ட தொகுதியை DFCC iConnect 2.0 வழங்குகின்றது. பல்-அடுக்கிலான அங்கீகார நடைமுறை, குழுவாரியான அணுகல், பிரத்தியேகமாக வடிவமைக்கப்படக்கூடிய உடனுக்குடன் அறிவிப்புக்கள், நிகழ்நேர தகவல் விபர அறிக்கைகள், மற்றும் மொபைல் கொடுக்கல்வாங்கல் அங்கீகார அனுமதிகள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளது. இதனை உள்வாங்கிக் கொள்வது முதற்கொண்டு, பயன்படுத்தும் காலத்தில் முழுமையான உதவியை வழங்குவதற்காக, பிரத்தியேகமான வாடிக்கையாளர் சேவை அணியின் நன்மையும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது. 

TradeConnect ன் அறிமுகமானது DFCC iConnect 2.0 ஐப் பொறுத்தவரையில் முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளதுடன், வணிகங்களுக்கு உண்மையில் மிகவும் முழுமையான டிஜிட்டல் வாணிபத் தளமாகவும் அதனை மாற்றியுள்ளது. கடனுறுதிக் கடிதம் (Letters of Credit - LC), இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கடன்கள், மற்றும் உள்நாட்டு, சர்வதேச வங்கி உத்தரவாதங்கள் உள்ளிட்ட முழுமையான வாணிப நிதி வசதிகளை இது வழங்குவதுடன், முற்பண கொடுப்பனவுகள் (Advance Payments), திறந்த கணக்குகள் (Open Accounts), கொடுப்பனவுக்கு எதிரான ஆவணங்கள் (Documents Against Payment - DP), மற்றும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு எதிரான ஆவணங்கள் (Documents Against Acceptance - DA) போன்ற பல்வகைப்பட்ட கொடுப்பனவு நிபந்தனைகளுக்கும் உதவுகின்றது. இத்தீர்வுகள் அனைத்தும் டிஜிட்டலை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பௌதிக ஆவணங்கள் அல்லது படிவங்கள் மற்றும் அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டிய தேவைகளையும் போக்குகின்றது. 

இது காகித பாவனை மற்றும் நிர்வாகச் சுமை ஆகியவற்றைக் குறைப்பது மாத்திரமன்றி, மீள்பாவனை செய்யக்கூடிய வார்ப்புருக்கள், டிஜிட்டல் பற்றுத் துண்டுகள், மற்றும் சௌகரியமான வழியில் செலுத்த வேண்டிய திகதியைக் கண்காணித்தல் மூலமாக வேகம் மற்றும் துல்லியத்தையும் மேம்படுத்துகிறது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு துரித கடன் நடைமுறையின் மூலமாக நன்மை கிட்டுவதுடன், வணிகங்களுக்கு நிகழ்நேர தகவல் விபர அறிக்கைகள் மற்றும் திரட்டிய பணிப்பாய்வுகள் மூலமாக பூரண அறிநிலை மற்றும் கட்டுப்பாட்டின் நன்மை கிட்டுகின்றது. கடன் உறுதிக் கடிதத்தின் முழுமையான நடைமுறை, கொடுப்பனவுகளைத் தொடங்குதல், ஏற்றுமதி உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்ளல் அல்லது வாணிபம் தொடர்புபட்ட நிதி வசதி என அனைத்திற்கும், ஒரு சில படிமுறைகள், விரைவான பதில் திருப்பம், மற்றும் கணிசமான அளவில் மேம்பட்ட உற்பத்தித்திறன் ஆகியவற்றுடன் சிக்கலான வாணிப கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளைக் கையாள்வதற்கு பாவனையாளர்களுக்கு DFCC iConnect 2.0 வலுவூட்டுகிறது. 

வெறுமனே தொழில்நுட்ப ரீதியிலான மேம்பாடு என்பதற்கும் அப்பால், உயர் பெறுபேற்றுத்திறன் கொண்ட டிஜிட்டல் தீர்வுகளையும், மனிதர்களுக்கு முதலிடம் அளிக்கும் சேவை மரபாண்மையையும் ஒன்றிணைத்து, DFCC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு சேவையை வழங்குகின்றது என்பது குறித்த ஆழமான மாற்றத்தின் அடையாளமாக DFCC iConnect 2.0 காணப்படுகின்றது. வங்கி தற்போது முன்னெடுத்து வருகின்ற டிஜிட்டல் பரிணாம மாற்றத்திற்கான பயணத்தின் ஒரு பகுதியாக, DFCC iConnect 2.0 ன் மீள்அறிமுகமானது வாடிக்கையாளர்கள் தமது வணிகங்களை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அவர்களுக்கு வலுவூட்டுகின்ற புத்தாக்கமான, உராய்வற்ற தீர்வுகளை வழங்குவதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. 

DFCC வங்கி குறித்த விபரங்கள் 

1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. 2025 ம் ஆண்டில் 70 ஆண்டுகள் சேவை நிறைவை இவ்வங்கி பெருமையுடன் கொண்டாடுவதுடன், புத்தாக்கம், நெகிழ்திறன் மற்றும் தேசிய அபிவிருத்திக்குப் பங்களிப்பதில் ஏழு தசாப்தங்களைக் குறித்து நிற்கிறது. 

இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது. வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 138 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 5,500 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. 

நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05