Jun 18, 2025 - 06:58 AM -
0
வைகாசி நிறைவடைந்து ஆனி மாதம் தொடங்கியுள்ளது. ஜூன் 15 முதல் ஜூலை 16 ஆம் திகதி வரையிலான இந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிதுனத்துக்கு சூரியன் வரும் மாதமே ஆனி. ஏற்கனவே மிதுனத்தில் குரு அமர்ந்திருக்கிறார். தற்போது குருவுடன் சூரியன் சேர்கிறார். இதனால், உலகத்தில் சில விஷயங்களில் நன்மைகளும், சில விஷயங்களில் பிரச்சனைகளும் ஏற்படும்.
பொதுவாக ஆனி மாதத்தில் பெருமாள், நரசிம்மர், தாயார் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். கிருஷ்ணர், சிவன் வழிபாடு செய்வது நல்லது. சிவன் கோயில்களில் அன்னதானத்திற்கு பிரசாதம் வாங்கி கொடுப்பது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன்
மகர ராசிக்காரர்கள் காது, மூக்கு, தொண்டை, சளி பிரச்சனை, பற்கள் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திங்கள்கிழமையில் தெய்வ வழிபாடுகளை தவறாமல் இருப்பது அற்புதத்தை ஏற்படுத்தும். இந்த ஆனி மாதம் உங்களுக்கு சூப்பர் டூப்பர் மாதமாக இருக்கும். இந்த காலகட்டங்களில் கட்டாயம் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும்.
கவனம்
கிரக நிலைகள் அற்புதமாக உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. எதிரிகளிடம் தகராறு செய்வதை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் வித்தைகள் காட்டுவதை தவிர்ப்பது நல்லது. உயரமான இடத்தில் வேலை செய்பவர்கள், கடினமான தொழில் அமைப்பில் இருப்பவர்களுக்கு நியாபக மறதியாலோ அல்லது தூக்கத்தாலோ விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. வழுக்கலான இடங்களில் அதீத கவனம் தேவை.
அனுகூலம்
எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். அனைத்து காரியங்களிலும் முன்வைத்த காலை பின்வைக்காமல் முன்னோக்கிச் செல்லக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், படிப்பு வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அடுத்தடுத்து அற்புதம் ஏற்படும். சுப விரைய பிராப்தம் உண்டாகும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அதி அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
பேச்சில் கவனம்
மனதிற்குப் பிடித்த இடத்திற்கு செல்வது, விருப்பமான தொழிலை, உத்தியோகத்தை செய்வது, படிப்பது என உங்கள் மனதுக்கு ஏற்றவாறு அனைத்து கிரகங்களும் செயல்படும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு வெள்ளை கொடி காட்டிச் செல்வது நல்லது. வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
லாபம்
குரு உங்களை 2 ஆம் இடத்தில் பார்த்தாலும் ராகு அங்கு இருப்பதால் வாக்குவாதத்தை மட்டும் தவிர்த்துக் கொள்வது யோக பலத்தை ஏற்படுத்தும். புதிய கடன்கள் ஏற்பட்டாலும் சந்தோஷ கடனாக காணப்படுவது லாபம், சந்தோஷம், அனுகூலத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் மேன்மையைக் காண்பீர்கள். பண வரவு அதிகரிக்கும். மாற்றத்தையும், முன்னேற்றத்தை தரும் மாதமாக இந்த ஆனி மாதம் உங்களுக்கு அமையும்.