மலையகம்
நுவரெலியா மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசமானது

Jun 18, 2025 - 10:29 AM -

0

நுவரெலியா மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசமானது

நுவரெலியா மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

 

நுவரெலியா மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் மத்திய மாகாண உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் இன்று (18) நடைபெற்றது.

 

மாநகர முதல்வரை தெரிவுசெய்வதற்கு திறந்த வாக்கெடுப்பு இன்று (18) மாநரசபையில் நடைபெற்றது.

 

இதன்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் உபாலி வணிகசேகர 14 வாக்குகளைப் பெற்று முதல்வரானார்.

 

நுவரெலியா மாநகரசபையில் தேசிய மக்கள் சக்திக்கு 12 ஆசனங்கள் உள்ள நிலையில்,

 

இ.தொ.காவின் இரு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். நுவரெலியா மாநகரசபையின் பிரதி மேயராக இ.தொ.கா உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சுமார் இரு தசாப்தங்களுக்கு பிறகு நுவரெலியா மாநகரில் பிரதி மேயர் பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05