Jun 18, 2025 - 12:13 PM -
0
இலங்கை மத்திய வங்கியினால் “டிஜிட்டல் பரிவர்த்தனைகளினூடாக எதிர்காலத்தை கட்டமைத்தல்” எனும் தொனிப்பொருளில் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்புத் திட்டம் 2025 இல் அமானா வங்கி பங்கேற்றிருந்தது. குறித்த பிரதேசங்களின் மாவட்ட செயலகங்களுடன் இணைந்து இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு கிரெகரி வாவியின் வாகனத் தரிப்பிடப்பகுதியிலும், ஹம்பாந்தோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு மஹாகம் றுகுணுபுர நிர்வாகத் தொகுதியிலும் நடைபெற்றன. இந்த இரு நிகழ்வுகளிலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி. நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுகளில் அரசாங்க அதிகாரிகள், நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
டிஜிட்டல் மயமாக்கத்தினூடாக நிலைபேறான மற்றும் உள்ளடக்கமாக பொருளாதார வளர்ச்சியை கட்டியெழுப்புவதை ஊக்குவிக்கும் அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பரந்த மூலோபாயத்துடன் பொருந்தும் வகையில், இலங்கை மத்திய வங்கியினால் நாடு முழுவதிலும் டிஜிட்டல் வங்கியியல் மற்றும் கொடுப்பனவுகளை பின்பற்றுவதை துரிதப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள தொடர் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளின் ஆரம்ப கட்டமாக இது அமைந்திருந்தது.
ஊக்குவிப்புத் திட்ட நிகழ்வுகளின் போது, Your Bank online banking app, video KYC செயற்படுத்தப்பட்ட ஒன்லைனில் கணக்கு ஆரம்பிக்கும் கட்டமைப்பு மற்றும் WhatsApp வங்கியியல் சேவைகள் போன்றன அடங்கலாக டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளை அமானா வங்கி வெளிப்படுத்தியிருந்ததுடன், டிஜிட்டல் கட்டமைப்புகளுக்கு வாடிக்கையாளர் பதிவுகளுக்கு வசதியளித்திருந்தது. வங்கியினால் LankaQR கொடுப்பனவு பொறிமுறையும் ஊக்குவிக்கப்பட்டிருந்ததுடன், பணப்புழக்கமில்லாத பரிவர்த்தனைகளை வேகமாக, பாதுகாப்பாக, செலவுச் சிக்கனமாக மற்றும் சௌகரியமாக முன்னெடுப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன், தமது மொபைல் தொலைபேசிகளினூடாக தினசரி கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு பாவனையாளர்களுக்கு வசதியளிப்பதாகவும் அமைந்துள்ளது.
வங்கியின் பங்கேற்பு தொடர்பில் அமானா வங்கியின் வைப்புகள் பரவலாக்கம் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்துக்கான உதவி உப தலைவர் அர்ஷாத் ஜமால்தீன் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை மத்திய வங்கியின் டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதையிட்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். டிஜிட்டல் வங்கியியல் மற்றும் கொடுப்பனவு தீர்வுகளை பாதுகாப்பாக அணுகச் செய்வது தொடர்பான எமது அர்ப்பணிப்புடன் இது ஒன்றித்துச் செல்வதாக அமைந்துள்ளது. டிஜிட்டல் உள்ளடக்கமான இலங்கைக்கு பங்களிப்பு செய்வது மற்றும் சமூகங்களுக்கு வலுவூட்டுவது போன்ற எமது செயற்பாடுகளை இந்தத் திட்டம் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

