Jun 18, 2025 - 12:32 PM -
0
புத்தளம் மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியியலாளர் முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத், மற்றும் பிரதி மேயர் நுஸ்கி நிசார் ஆகியோர் தமது கடமைகளை நேற்று (17) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
புத்தளம் மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி மாலை புதிய மேயரை தேர்வு செய்யும் கூட்ட அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான பொறியியலாளர் முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத், மேயராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் தேர்வில் 10 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான நுஸ்கி நிசார், புத்தளம் மாநகர சபையின் முதல் பிரதி மேயராக தெரிவானார்.
இந்த நிலையில், புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியியலாளர் முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத், மற்றும் பிரதி மேயர் நுஸ்கி நிசார் ஆகியோர் புத்தளம் வமாநகராட்சி ஆணையாளர் எம்.எம்.நந்தன மஹிபால முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் புத்தளம் மாநகர சபையின் செயலாளர் எல்.பி.ஜி.பிரீதிகா உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
--