வடக்கு
வவுனியா மாநகர முதல்வர் கடமைகளை பொறுப்பேற்றார்!

Jun 18, 2025 - 04:32 PM -

0

வவுனியா மாநகர முதல்வர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வவுனியா மாநகர முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர் ஆகியோர் இன்று (18) காலை கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றனர்.

 

வவுனியா மாகநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு அண்மையில் இடம்பெற்றிருந்தது.

 

அந்தவகையில் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபனும், பிரதி முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

 

அவர்கள் உத்தியோக பூர்வமாக இன்றையதினம் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

 

குறித்த நிகழ்வில் சமயத்தலைவர்கள் பொதுமக்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05