வணிகம்
தெற்காசியாவின் புதுமையாக்கத்தின் மையமாக இலங்கையை மாற்றும் துணிச்சலான நோக்கத்துடன் மீண்டும் வருகின்றது Disrupt Asia 2025

Jun 18, 2025 - 04:53 PM -

0

தெற்காசியாவின் புதுமையாக்கத்தின் மையமாக இலங்கையை மாற்றும் துணிச்சலான நோக்கத்துடன் மீண்டும் வருகின்றது Disrupt Asia 2025

இலங்கை 2030ஆம் ஆண்டாகும்போது தெற்காசியாவின் புதுமையான மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இந்த லட்சிய மாற்றத்தை இயக்கும் தேசிய தளமாக Disrupt Asia 2025 அமைந்துள்ளது. முதலீடுகள், முதலீட்டாளர்களை ஈர்த்தல், ஆரம்ப முயற்சிகள் மற்றும் ஊக்குவிப்பாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கான சூழலை Disrupt Asia உருவாக்குகின்றது. 

பிராந்தியத்தில் புதுமையாகத்திற்கான சூழலைக் கொண்ட பலம்மிக்க சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, இந்நாடு டிஜிட்டல் தொழில்துறைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த நோக்கத்தின் முக்கிய அம்சங்களில் 50 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள Fund of Funds ஐ அறிமுகப்படுத்துவது, மெய்நிகர் விசேட பொருளாதார வலயத்தை உருவாக்குதல் (Virtual Special Economic Zone (SEZ)), மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசிய நாடுகள் ஆகியவற்றுக்கிடையிலான பாலமாக இலங்கையை மூலோபாய ரீதியில் நிலைநிறுத்துவது என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன. 

தெற்காசியாவின் புதுமையாக்கத்திற்கான மையமாகவும், படைப்பாற்றல், ஒத்துழைப்பு மற்றும் வியாபார மூலதனம் ஆகியவற்றுக்கான மையமாகவும் கொழும்பை மாற்றும் இந்த மாநாடு 2025 செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. ஆரம்ப முயற்சிகள், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், பெருநிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், சுற்றுச் சூழல் அமைப்பாளர்கள் எனப் பிராந்தியத்தைச் சேர்ந்த பல்துறையைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கெடுத்து இலங்கையின் டிஜிட்டல் உருமாற்ற நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லவுள்ளனர். 

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் Disrupt Asia 2025 நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சு, மாஸ்டர் கார்ட் (MasterCard), வென்ஞ்சர் இன்ஜின் (Venture Engine), என்வென்ஞ்சர்ஸ் (nVentures), ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிற்றி (Trace Expert City), அசயா சான்ட்ஸ் (Asaya Sands), யூஎன்டிபி (UNDP), பிஓவி கெபிடல்(BOV Capital), இந்தியன் ஏஞ்சல் நெட்வேர்க்ஸ் (Indian Angel Network), லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க்ஸ் (Lankan Angel Network), ஹட்ச் ( Hatch), ஸ்பைக் (Spike), சினமன்ட் லைஃவ் (Cinnamon Life), ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் டயலொக் (Dialog)ஆகியன கைகோர்த்துள்ளன. 

இது பற்றிக் கருத்துத் தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் கௌரவ (பொறியியலாளர்) எரங்க வீரரத்ன குறிப்பிடுகையில், “இலங்கையில் ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கான முன்னணி மாநாடும், புத்தாக்கத் திருவிழாவுமான Disrupt Asia 2025 ஆனது தொழில்நுட்பம், படைப்பாற்றல் மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றால் இயக்கப்படும் எதிர்காலத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வது தொடர்பில் நாடு கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு சிறந்த சான்றாக அமைகின்றது. பிராந்தியத்தில் இலங்கையை ஒரு டிஜிட்டல் மையமாக மாற்றுவதை நோக்கிச் செயற்பட்டுவரும் வேளையில், தொடக்க நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பை விரைவுபடுத்துவதற்கும், உலகளாவிய ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், நமது நாட்டைச் சேர்ந்த அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களின் திறப்பை வளர்ப்பதற்கும் இது போன்ற தளங்கள் நமக்கு அவசியமாக அமைகின்றன” என அறிவித்தார். 

மாஸ்டர்கார்டின் இலங்கை மற்றும் மாலத்தீவு நாடு மேலாளர் சந்துன் ஹபுகொடா அவர்கள் கூறியதாவது: Disrupt Asia 2025-இன் ஒரு பங்காளியாக மாஸ்டர்கார்ட் மகிழ்ச்சியடைகிறோம். இது உருமாறும் தொழில்நுட்பங்களில் புதுமை, ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான மேடையாகும். டிஜிட்டல் முன்னேற்றங்கள் வணிகம், சைபர் பாதுகாப்பு மற்றும் நிதி சூழல்களை மீண்டும் வரையறுக்கும் இந்த நேரத்தில், இலங்கையின் டிஜிட்டல் சமத்துவ எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை ஆதரிப்பதில் மாஸ்டர்கார்ட் உறுதியாக நிற்கிறது. தீவிரத் தெளிவுடைய தொழில் முனைவோர், தொழில் முன்னோடிகள் மற்றும் மாற்றத்தை நோக்கியோருடன் இணைந்து செயல்படுவதன் மூலம், நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்தவும், இப்பிராந்தியத்தில் ஒரு துடிப்புமிக்க புதுமைப்பித்தராக அதன் பங்கை உறுதிப்படுத்தவும் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

நிகழ்வுகளின் நான்கு நாள் தொடரின் தொடக்கமாக, செப்டம்பர் 17 அன்று இலங்கையின் முன்னணி ஸ்டார்ட்அப் நிதியளிப்பு மேடையான வென்சர் எஞ்சின் – Venture Engine (VE) நடைபெறும். இந்த திட்டம் ஸ்டார்ட்அப்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகாட்டுதல், உத்தியளவான வெளித்தொடர்பு மற்றும் புதுமைத்திறனின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முன்னணி முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. பிஓவி கெப்பிட்டல் (BOV Capital), இந்தியன் ஏஞ்சல் நெட்வேர்க்ஸ் (Indian Angel Network) ஆகியவற்றினால் வலுப்படுத்தப்பட்டுள்ள வென்ஞ்சர் இன்ஜின் (Venture Engine) நிறுவனம் லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க்ஸ் (Lankan Angel Network) இன் பெருமைமிக்க கூட்டாண்மையுடன் இந்த வருடத்திற்கான Disrupt Asia நிகழ்வு அரச – தனியார் கூட்டுமுயற்சியாக அமைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. ஆரம்ப வணிக முயற்சிகளுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும் Disrupt Asia நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதும் 2025 ஜூன் 18 ஆம் திகதி முதல் Venture Engine 2025 இன் பதிவுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும். தகுதியுள்ள ஆரம்ப வணிக முயற்சிகள் தமது விண்ணப்பங்களை உத்தியோபூர்வ தளமான https://ventureengine.lk இன் ஊடாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

பிஓவி கெப்பிட்டல்(BOV Capital) இன் இணை நிறுவுனரும் முகாமைத்துவப் பங்காளரும், லங்கன் ஏஞ்சல் நெட்வேர்க்ஸ் (Lankan Angel Network) இன் நிறுவுனருமான பிரஜீத் பாலசுப்ரமணியம் குறிப்பிடுகையில், “ திறமையான யோசனைகளை இலங்கை மற்றும் உளகளாவிய ரீதியில் தாக்கமுள்ள தீர்வுகளமாக மாற்றக்கூடிய ஆரம்ப வணிக முயற்சிகளை ஆதரித்து அவற்றுக்கான சிறந்த மேடையாக வென்ஞ்சர் இன்ஜின் (Venture Engine) விளங்குகின்றது. உலக அரங்கில் இலங்கையை வைக்க ஆர்வமுள்ளவர்களுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறும் அழைக்கின்றோம்” என்றார். 

Disrupt Asia 2025 இன் மைய நிகழ்வாக அமையும் பிரதான மாநாடு மற்றும் ஆரம்ப வணிகங்கள் குறித்த கண்காட்சி செப்டெம்பர் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் துறைசார் முன்னோடிகள், கொள்கைத் தலைவர்கள் மற்றும் உளகலாவிய ரீதியிலான புதுமையாக்கத்தின் நிபுணர்கள் கலந்துகொண்டு பிரதான உரைகளை நிகழ்த்தவுள்ளனர். 30க்கும் மேற்பட்ட தரம் மாற்றும் ஸ்டார்ட்அப்களை வெளிப்படுத்தும் வலுவான கண்காட்சியை அனுபவிக்கவும் வாய்ப்பு பெறுவர். 

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், 1-2 வென்ச்சர் நிதிகள், முதலீட்டாளர்கள் மற்றும் துரிதப்படுத்திகளை இலங்கை சந்தையில் நுழைய ஈர்ப்பதாகும். ஒரு முக்கியமான துரிதப்படுத்தியை (Accelerator - ஆக்சிலரேட்டர்) இலங்கையில் அமைப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. மாநாட்டின் மையக்கருப்பொருள், குறுக்கு-எல்லை முதலீடுகளைத் தூண்டுவதும், Fund of Funds முயற்சி மூலம் உத்தியாளமான கூட்டுப்பணிகளை வளர்ப்பதுமாகும். இது இலங்கையை பிராந்திய வென்ச்சர் மூலதன செயல்பாடுகளுக்கான முக்கிய இலக்காக உயர்த்தும். 

செப்டம்பர் 19 அன்று நடைபெறும் ‘புதுமை விழா’ தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றலின் ஒரு பொது விழாவாக அமையும், இது அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஈடுபாட்டுடன் கற்கும் ஊடாடும் தொழில்நுட்ப காட்சிப்படுத்தல்கள், 50க்கும் மேற்பட்ட நேரடி தயாரிப்பு காட்சிப்படுத்தல்கள் மற்றும் முழுமையாக மூழ்க வைக்கும் நிறுவல்கள் மூலம் தொழில்நுட்ப ஆர்வத்தைத் தூண்டும் வாய்ப்பைப் பெறுவர். இந்த விழா நிதித் தொழில்நுட்பம் (FinTech), ஆரோக்கியத் தொழில்நுட்பம் (HealthTech), வேளாண் தொழில்நுட்பம் (AgriTech), செயற்கை நுண்ணறிவு (AI), சுற்றுலா தொழில்நுட்பம், அரசு தொழில்நுட்பம் (GovTech) உள்ளிட்ட எழுச்சிமிக்க துறைகளில் அடிப்படையிலான அமர்வுகளை வழங்கி, தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை அறிமுகப்படுத்தும். 

TRACE Sri Lanka இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமிந்த ஜயவீர கருத்துத் தெரிவிக்கையில், “இளையோர், கல்வியியலாளர்கள், தொழில்துறை மற்றும் அரசாங்கம் ஆகியவற்றை ஒரே மேடையில் ஒன்றிணைத்து, புதுமையாக்கம் மற்றும் தொழில்முனைவைக் கொண்டாடும் முக்கிய நிகழ்வாக அமையும் வகையில் Disrupt Asia 2025 இன் புத்தாக்கத் திருவிழாவை ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிற்றி (TRACE Expert City) ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் புத்தாக்கத் திருவிழா இலங்கையில் உள்ள தொழில்நுட்ப ஆரம்ப வர்த்தக முயற்சிகளை முன்னிலைப்படுத்தி, அவற்றை உலகளாவிய நிபுணத்துவத்துடன் இணைக்கும் வாய்ப்பை வழங்கும். அத்துடன், டிஜிட்டல் ரீதியான தலைமைத்துவத்தைக் கொண்ட எதிர்காலத்திற்குத் தேவையான தைரியமான யோசனைகளையும் தூண்டும் வகையில் இது நடத்தப்படும். இந்தப் பிரதான நிகழ்வை நடத்துவதில் பங்காளர்களாக இணைவதில் TRACE பெருமையடைகின்றது” என்றார். 

Disrupt Asia 2025 இன் சர்வதேச ஈடுபாட்டின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு உலகத் தரம் வாய்ந்த இலங்கையின் வர்த்தக நாமங்களை ஒரு தனித்துவமான கலாசார கண்காட்சியில் முன்னிலைப்படுத்தும் வகையில் அமையும். கைவினைஞர்களின் சுவை விருந்துகள் மூலம் இலங்கையின் செழுமையைப் பார்வையாளர்கள் அனுபவிக்க முடியும். Asaya Sands இலங்கையின் தென் கரையோரப் பகுதிகளின் சுவைகளை பிரதிபலிக்கும் வகையில், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சமையல் அனுபவத்தைக் கொண்டு வருகின்றது. அந்த மாலை நிகழ்வில், மாணிக்கக் கல் கண்காட்சிகள் மற்றும் கலாசார அம்சங்களும் இடம்பெறவுள்ளன. இவை, இலங்கைத் தீவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் இலங்கையின் புதுமை மற்றும் படைப்பாற்றல் சிறப்புகளை உலக ரசிகர்களுடன் இணைக்கும் ஒரு சிறிய மையமாக உருவாகும் நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன. 

இலங்கையை தெற்காசியாவின் புதுமையாக்கத்தின் மையமாக மாற்றுவதில் ஊக்கியாக புதுமைத் திறன் மையமாக மாற்றுவதில் Disrupt Asia 2025 ஓர் ஊக்கியாக அமையும். இந்த நான்கு நாள் நிகழ்வு, பிராந்தியத்தில் உள்ள ஆரம்ப வணிகளுக்கு ஏற்ற சூழலை மறுவடிவமைப்பதுடன், தெற்காசியாவில் தொழில்நுட்பமும், தொழில்முனைவும் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05