வடக்கு
400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை

Jun 19, 2025 - 10:41 AM -

0

400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை

மன்னார் மருதமடு திருப்பதியின் ஆடி மாத திருவிழாவையொட்டி முன்னாயத்த கலந்துரையாடல் நேற்று (18) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார், மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், இராணுவம், பொலிஸ், கடற்படை உயர் அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.

 

மன்னார் மருதமடு திருப்பதியின் ஆடி மாத திருவிழாவுக்கான கொடியேற்றம் இம்மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடி மாதம் 2 ஆம் திகதி  திருவிழா திருப்பலியுடன் நிறைவடையவுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

 

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் வருகை தர உள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 400 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடு படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும் மேலும் வருகை தரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து, மருத்துவ வசதிகள், உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

 

மன்னார் மருதமடு திருப்பதியின் ஆடி மாத திரு விழாவுக்கான கொடியேற்றம் இம்மாதம் 23 ஆம் திகதி (23) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.

 

ஆடி மாதம் 01 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வேஸ்பர் ஆராதனையும், ஆடி மாதம் 2 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05