Jun 19, 2025 - 11:05 AM -
0
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை செவிலியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த தாக்குதலில் இரோஷிகா சதுரங்கனி என்ற பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இது தொடர்பில் ஆராய்வதற்காக தூதரகக் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாகவும் நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டார்.

