Jun 19, 2025 - 11:56 AM -
0
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் களரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டு வருகின்றார்.
படப்படிப்பு ஒன்றுக்காக நடிகர் மோகன்லால் சமீபத்தில் இலங்கைக்கு வருகைதந்திருந்த நிலையில், இன்று (19) இலங்கை பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.
சமீப காலமாக பல்வேறு தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் படப்பிடிப்பு மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக இலங்கைக்கு வருகை தருகின்றனர்.

