Jun 19, 2025 - 12:09 PM -
0
பொகவந்தலாவ பொகவானை தோட்டப்பகுதியில் 06 ஆம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த எட்டு பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (19) காலை 10.15 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது தேயிலை மழையின் அடிவாரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
காயங்களுக்கு உள்ளான எட்டு பெண் தொழிலாளர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதோடு காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லையென பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
--

