Jun 19, 2025 - 01:18 PM -
0
NDB வங்கியானது அர்த்தமுள்ள நிதியியல் தீர்வுகள் மூலம் மகளிரை வலுப்படுத்தும் அதன் உறுதிப்பாட்டிற்கு இணங்க, சத்தை வலுப்படுத்தும் மகளிருக்கு NDB அரலிய மூலம் அற்புதமான பரிசில்களை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. ஜூன் 1 முதல் ஜூலை 31, 2025 வரை நடைபெறவுள்ள இந்த பிரத்தியேக பிரசாரமானது, புதிய மற்றும் ஏற்கனவே உள்ள NDB அரலிய கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஊக்குவிப்பு காலத்தில் செய்யப்பட்ட தகுதிவாய்ந்த வைப்புகளுக்கு சிறப்பு பரிசில்களை வழங்குகிறது.
NDB அரலிய கணக்கென்பது நிதியியல் சுதந்திரம், மீள்எழுச்சி மற்றும் நீண்டகால திட்டமிடலை ஊக்குவிக்கும் மகளிருக்கான ஒரு பிரத்தியேக சேமிப்புக் கணக்காகும். இந்த ஊக்குவிப்பு திட்டமானது இலங்கை முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தமது சேமிப்புப் பழக்கத்தின் மூலம் பயனடைய வாய்ப்பளிக்கிறது. பிரசாரக் காலத்தில் ரூ.15,000 அல்லது அதற்கு மேல் பணவைப்பு செய்யும் வாடிக்கையாளர்கள் அற்புதமானபரிசில்களைப் பெறவுள்ளனர். இந்தபரிசில்கள் அரலிய கணக்கு வைத்திருப்பவர்கள் காட்டும் நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கான பாராட்டுக்கான சிந்தனைமிக்க அடையாளமாகவும், பெண்கள்தமது நிதியியல் அடித்தளத்தை வலுப்படுத்தும் ஊக்கிகளாகவும் செயல்படுகின்றன.
புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமுடையதாக திகழும் இந்த பிரசாரமானது, ஒவ்வொரு பெண்ணும் தனது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வெகுமதியைப் பெற வேண்டும் என்ற NDB-யின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. புதிய கணக்கைத் திறந்தாலும் அல்லது ஏற்கனவே உள்ள கணக்கை தொடர்ந்தாலும், தகுதியுள்ள வாடிக்கையாளர்கள்ஊக்குவிப்பு காலத்தில் பிரத்தியேக சலுகைகளை அனுபவிக்க முடியும்.
NDB அரலிய கணக்கானது பிரசாரத்திற்கு அப்பால், பெண்களின் நிதியியல் நல்வாழ்வை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட பல்வேறு ஒப்பற்ற நன்மைகளை வழங்குகிறது. இதில் கணக்கு வைத்திருப்பவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரூ.1,000,000 வரை இலவச ஆயுள் பாதுகாப்பு காப்புறுதி, அத்துடன் கணக்கு வைத்திருப்பவருக்கும் அவரது அன்புக்குரியவர்களுக்கும் இலவச மருத்துவமனை சிகிச்சை காப்புறுதி ஆகியவை அடங்கும்.மேலதிகமாக, குழந்தை பிறப்பின் போது அதிகபட்சமாக ரூ.25,000 வைப்புத்தொகையுடன் கூடிய இலவச NDB ஷில்பா சிறுவர் சேமிப்புக் கணக்கையும் வங்கி வழங்குகிறது. மேலும் நீண்ட கால சேமிப்பு ஒழுங்குமுறையை அங்கீகரிக்கும் விதமாக, ரூ.25,000 க்கு மேல் மாதாந்த சராசரி இருப்பை பராமரிக்கும் அரலிய வாடிக்கையாளர்கள் தமது 21 வது பிறந்தநாளில் சிறப்பு பரிசில் வவுச்சரைப் பெறவும் உரித்துடையவராகின்றனர்.. மேலதிகமாக , கணக்கு வைத்திருப்பவர்கள் தனிப்பயனாக்கப்பட்ட அரலிய-வர்த்தகநாம ATM டெபிட் அட்டை மற்றும் பல பிரத்தியேக சலுகைகளைப்பெறுவார்கள்.
NDB வங்கியானது பெண் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சம்பளம் பெறும் பெண்களுக்கு ஏற்றவாறு சிறப்பு கடன் வசதிகளை வழங்குகிறது. இது ஒரு தொழிலைத் தொடங்குவது அல்லது வளர்ப்பது அல்லது வாழ்க்கையின் அன்றாடத் தேவைகளை அதிக நம்பிக்கையுடன் நிர்வகிப்பது போன்ற அவர்களின் கனவுகளை ஆதரிக்கிறது.
NDB வங்கியானது அரலிய மகளிர் சேமிப்புக் கணக்கின் மூலம், பெண்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப நிதியியல் கருவிகளை உருவாக்குவதில் தொடர்ந்து முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஊக்குவிப்பானது , நாட்டின் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் பெண்களின் பங்கை அங்கீகரித்து மேம்படுத்துவதற்கான வங்கியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் மற்றுமொரு முயற்சியாகும். பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்து, அவர்களின் சமூகங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் இலங்கைப் பெண்களைக் கௌரவித்து கொண்டாடும் முதன்மை முயற்சியான வனிதாபிமான போன்ற NDB இன் தொடர்ச்சியான முயற்சிகளிலும் இந்த அர்ப்பணிப்பானது பிரதிபலிக்கிறது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள NDB கிளைக்கு செல்லுமாறு கோரப்படுகிறார்கள் அல்லது https://www.ndbbank.com/personal-banking/accounts/araliya-women-savings-account ஐப் பார்வையிடவும். NDB அரலிய கணக்கைப் பற்றி மேலும் அறியவும், இந்த வரையறுக்கப்பட்ட கால ஊக்குவிப்பு திட்டத்தில் பங்கேற்கவும் பெண்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

