செய்திகள்
பெத்தும் நிஸ்ஸங்க சதம்

Jun 19, 2025 - 01:57 PM -

0

பெத்தும் நிஸ்ஸங்க சதம்

காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க தனது 3ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். 

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, சற்று முன்னர் வரை 1 விக்கெட்டினை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

இலங்கை அணி சார்பாக பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காமல் 116 ஓட்டங்களுடனும், தினேஸ் சந்திமால் 52 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர். 

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷின் முதலாவது இன்னிங்ஸ் இன்று காலை நிறைவுக்கு வந்தது. 

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 495 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்ஃபிகர் ரஹீம் 163 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஷான்டோ 148 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களையும், மிலான் ரத்னாயக்க, தரிந்து ரத்னாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05