வணிகம்
செலான் வங்கி, முன் அங்கீகரிக்கப்பட்ட செலான் லீசிங் வசதியுடன் கனவு வாகனத்தின் இறக்குமதியை எளிதாக்குகின்றது

Jun 19, 2025 - 03:04 PM -

0

செலான் வங்கி, முன் அங்கீகரிக்கப்பட்ட செலான் லீசிங் வசதியுடன் கனவு வாகனத்தின் இறக்குமதியை எளிதாக்குகின்றது

முன் அங்கீகாரம் பெற்ற லீசிங் மூலம் எந்தவொரு வாடிக்கையாளரினதும் கனவு வாகனத்தை இறக்குமதி செய்ய வசதியாக ஒரு தனித்துவமான சலுகையை வழங்க செலான் வங்கி தயாராக உள்ளது. இதன் மூலம் கார் இறக்குமதியாளர்கள் மற்றும் வாகன ஆர்வலர்கள் ஏற்கனவே உள்ள வாகனத்தை மேம்படுத்தவோ அல்லது புதிய வாகனமொன்றில் இலகுவாக முதலீடு செய்யவோ முடியும். 

அன்புடன் அரவணைக்கும் வங்கியின் புதிய லீசிங் முன்னெடுப்பு, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வாகன முதலீடுகளுக்கு எளிமையான தீர்வின் ஊடாக வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த லீசிங் வசதி ஆனது புதிய வாகனத்தை தடையின்றி லீசிங்கிற்கு எடுக்க விரும்பும் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஒரு பாதையை திறக்கிறது. முன் அங்கீகரிக்கப்பட்ட செலான் லீசிங், நாட்டிற்குள் வாகனங்களை கொண்டு வரும்போது இறக்குமதி வரிகளைச் செலுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. எனவே, நாணயக் கடிதத்தை வழங்குவதில் இது ஒரு போட்டிமிக்க தரகை வழங்குகிறது. மேலும் இது, பிரீமியம் சலுகைகளுடன் மேம்படுத்தப்பட்ட மோட்டார் வாகன காப்புறுதிக்கு மேலதிகமாக பிரத்தியேக லீசிங் வீதங்கள் மற்றும் கப்பல் காப்புறுதி சலுகைகளையும் கொண்டுள்ளது. 

வீட்டிற்கு வருகை தந்து சேவை வழங்கல் மற்றும் விரைவுபடுத்தப்பட்ட express சேவை ஆகியவை சிறப்பான வாடிக்கையாளர் சேவைகளில் உள்ளடங்கும். வாடிக்கையாளர்களுக்கு சிக்கலற்ற நிதிச் சேவையினை வழங்குவதை நோக்கமாக கொண்ட அன்புடன் அரவணைக்கும் வங்கி, ஒரு அர்ப்பணிப்புள்ள ஆலோசகரை நியமித்து செயல்முறையை நெறிப்படுத்துவதிலும் அதன் விரைவுத்தன்மையை உறுதி செய்வதிலும் ஒரு படி மேலே செல்கிறது. 

லீசிங் மூலம் வழங்கப்படும் இந்த முழுமையான வசதி, தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் சிறந்த தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவைக்கு முன்னுரிமை அளிக்கும் செலான் வங்கியின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05