Jun 19, 2025 - 04:08 PM -
0
கொரிய கலாச்சார விழாவின் Taekwondo Poomsae சாம்பியன்ஷிப் 2025 கண்டியில் இடம்பெற்றது. இதில் டேக்வாண்டோ ஏரோபிக்ஸ் முதலாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
கண்டியில் உள்ள 5 விளையாட்டு கழகம் கலந்துகொண்ட குறித்த போட்டியில் அனைத்து விளையாட்டுக் கழகங்களையும் வீழ்த்தி ஜே.எம் டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் முதலிடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்றிய கொரிய தூதரகம், மாஸ்டர் கி.சு.லீ ஏற்பாட்டுக் குழு (O.C), அனைத்து பயிற்சியாளர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
--

