சினிமா
மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா

Jun 19, 2025 - 05:36 PM -

0

மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு ஷோ சரிகமப சீசன் 5.

 

சிறுவர்களுக்கான சீசன் முடிவடைந்த வேகத்தில் சீனியர்களுக்கான 5வது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இலங்கை பெண் இந்த 5வது சீசனில் இலங்கையில் இருந்து சினேகா என்ற பெண் பாட வந்துள்ளார்.

 

ஆனால் சினேகா வேறொரு பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது வசதியானவர் போல் காட்டப்பட்டார், இதில் வசதி இல்லாத குடும்பமாக காட்டுகிறார் என நிறைய விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்த நிலையில் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் பாட வந்த சினேகா மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து தான் வந்துள்ளார்.

 

அவருக்கு மொத்தமாக 4 துணிகள் தான் உள்ளதாம், வறுமையால் இந்த நிகழ்ச்சிக்கு கூட அப்பா-அம்மா இல்லாமல் தனியாக தான் வந்துள்ளாராம். அவர் உடை கூட இல்லை என்று சொன்னதும் பாடகி ஸ்வேதா நாம் கண்டிப்பாக ஷாப்பிங் செல்வோம் என கூறினார்.

 

அவரது அம்மா உடல்நலக் குறைவால் வீட்டிலேயே இருக்கிறார், அப்பாவின் சம்பளத்தில் தான் அவரது குடும்பம் உள்ளது.

 

இலங்கையில் உள்ள அவரது ஊர் மக்கள் சினேகா குறித்தும், கஷ்டங்கள் குறித்தும் பேச அவர் அப்படியே எமோஷ்னல் ஆகியுள்ளார். 

Comments
0

MOST READ
01
02
03
04
05